திருகோணமலையில் இருமாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர் பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு கிராமம் இன்று (25) வியாழக்கிழமை வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் "பாவநாசம் 225வது கிராமம்" கையளிக்கப்பட்டது.இங்கு 17 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் தொல்காப்பிய நகர் 226வது கிராமமாகும். இங்கு 25வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், சந்திப் சமரசிங்க,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருக்குமார், பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -