கன்னியா வெந்நீரூற்று விடயத்தில் இனமுறுகலை உண்டு பன்ன முயற்சிக்கின்றனர்-சுசந்த புஞ்சிநிலமே

திருகோணமலையில் இன மோதலை ஏற்படுத்தினால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிக்கு சீர்குலையும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் சான்றுள்ள இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அது அமைந்துள்ள இடத்துக்கு கோகிலா ரமணி என்ற பெண் உரிமை கோரியுள்ளார். அத்துடன் இராவண சேனை என்ற அமைப்பும் இன்னொரு அமைப்பும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இன முறுகல் நிலையை ஏற்படுத்தினர்.

நான் அம்மாவட்ட எம்.பி.என்ற அடிப்படையில் கன்னியா வெந்நீரூற்று விடயத்தில் தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறினேன். இதனையடுத்து நான் இனமோதலையும் இனவாதத்தையும் தூண்டுவதாக இந்த அமைப்புக்கள் என் மீது குற்றம் சாட்டியுள்ளன. நாம் இம்மாவட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் பெற்றவன் என்ற அடிப்படையில் இது எனது சிறப்புரிமையை மீறுவதாகவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் ஒரு குழப்ப நிலையை அப் பகுதியில் ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் செயற்பாடு திருகோணமலையில் இன மோதலை ஏற்படுத்தினால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிக்கு அழிவையே ஏற்படுத்தும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -