கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் யாரையும் யாரும் அடக்கி ஆழ முடியாது. : பிரதி தவிசாளர் ஜாஹீர் !!


நூருல் ஹுதா உமர் -
ரித்திரமாக பதியப்பட்டுள்ள கல்முனை பிரதேச செயலக விவகாரம் நீண்டகால வரலாற்றை கொண்டது . கல்முனை மாநகரில் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அண்மைக்காலமாக இரு சமூகத்துக்கு மத்தியிலும் சில விஷமிகளால் இனவாதம் பரப்பப்பட்டு வருவது கவலையான ஒன்றாகும். சதிவலையில் சிக்கி தவிக்கும் இந்த நகரம் நான்கு சபைகளாக இருந்து வந்தது மக்களின் முன்னேற்றத்தினை மையமாக கொண்டு ஒரு முக்கிய மாநகரமாக மாற்றப்பட்டது என காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச முஸ்லிம் பகுதிகளுக்கான அமைப்பாளருமான அ .ம. ஜாஹீர் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் 17வது மாதாந்த அமர்வு நேற்று காலை சபா மண்டபத்தில் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற போது கல்முனை பிரதேச செயலக தரமுயர்வை வலியுறுத்தி பிரதேச சபை உறுப்பினர் ஜெயராணியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை சார்ந்த உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் அப்பிரதேசத்தில் வசிக்கும் இரு முக்கிய இனங்களுக்கு மத்தியில் முரண்பாடு உருவாக்கி அரசியல் நாடகத்தை அரங்கேற்றி உண்ணாவிரதம், சத்தியாகிரகம் என இந்த போராட்டம் இப்போது உச்சத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையின் ஆழம் வெகுவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு வாய்க்கு வருவதையேல்லாம் பேச முடியாது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.
இது வெளிநாட்டு சதியா அல்லது எமது நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் இருப்புக்கான நாடகங்களா ? என்பதை நாங்கள் ஆராயவேண்டிய கடமை இருக்கிறது. நாங்கள் பரம்பரை பரம்பரையாக ஒற்றுமையுடன் வாழ்ந்தவர்கள். எமது பிரச்சினைகளுக்கு மூன்றாம் தரப்பு நீதி சொல்லும் நிலைக்கு நாங்கள் வழி வகுக்கக்கூடாது. எமது பிரச்சினைகளை நாங்கள் ஒரு மேசையில் இருந்து பேச முன்வரவேண்டும். யாரையும் யாரும் அடக்கி ஆழ முடியாது. அவர்களுக்கு ஒரு செயலகம் உருவாக்க வேண்டும். என்பதில் நாங்கள் எதிர்ப்பில்லை . அந்த செயலகம் ஆங்கிலேயரின் காலத்து பிரிப்பை போன்று நான்காக பிரிக்கப்பட்டு சரியான எல்லைகளுடன் உருவாக்கப்பட்டால் மாத்திரமே அது நீதியாகவும் எதிர்காலத்தில் பிணக்குகள் இல்லாமலும் இருக்கும்.
மட்டக்களப்பில் இருந்து வந்தது எமது ஒற்றுமையை சீரழிக்க நினைப்பவர்களை நாம் ஒன்றிணைந்து துரத்த வேண்டும். இனவாதிகளின் மோசமான முன்னெடுப்புக்களை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. நாம் இந்த சபையில் பிரேரணை நிறைவேற்றி எதுவும் ஆகப்போவதில்லை. இந்த அரசுக்கு முட்டுக்கொடுத்திருக்கும் தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரே மேசையிலிருந்து மனம் திறந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். மக்களை வீதிக்கு இறக்கி இனமுறுகலை உருவாக்க கூடாது என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
இப்பிரதேச செயலக பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட தவிசாளர் அறிவித்தவுடன் 12 உறுப்பினர்கள் உள்ள இந்த சபையில் இந்த பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மூவர், சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், சுயாதீன அணியை சேர்ந்த (மீன் சின்னம்) இருவர் அடங்கலாக ஆறுபேர் வாக்களித்தனர். இப்பிரேரணையை எதிர்த்து சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதி தவிசாளர், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அடங்கலாக நால்வர் எதிர்த்து வாக்களித்தனர். தோடம்பழ சின்னத்தில் வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர் யாருக்கும் வாக்களிக்காமல் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டார். மேலதிகமாக இரண்டு வாக்குகளால் பிரேரணை வெற்றி பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -