இலங்கையில் சர்வதேச இன நல்லுறவுக்கான மாநாடு - ஆளுநர் முஸம்மில் மகாநாயக்க தேரர்களிடம் அறிவிப்பு


ஐ. ஏ. காதிர் கான்-
ர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்குச் சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளுநர் முஸம்மில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்களிடம் சர்வதேச இஸ்லாமிய மாநாடு குறித்து அறிவிப்பதற்காகவே, (14) சனிக்கிழமையன்று ஆளுநர் முஸம்மில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்றிருந்ததாகத் தெரியவருகிறது.
இம்மாத இறுதியில், சர்வதேச இன நல்லுறவுக்கான இஸ்லாமிய மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -