திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் சங்கத்தின் 16 ஆம் வருட புதிய நிருவாக சபையினரின் தெரிவு மற்றும் அங்கத்துவம் புதுப்பித்தல் தொடர்பான ஒன்று கூடல் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மூவீன ஊடக அங்கத்தவர்களை கொண்ட ஊடகவியலாளர் சங்கமாக தமது ஊடகப் பணிகளுடன் சமூக நலப் பணிகளையும் செய்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் இயங்கி வருவது ஏனைய மாவட்டத்திற்கும் ஒரு மாதிரியாகும். காலை 9.30 மணிக்கு சங்கத்தின் தலைவர் அ.அச்சுதன் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ் ஒன்று கூடல் கூட்டத்தில் பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
