மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 கடை இன்று அதிகாலை 5.00 மணியளவில் தாழிரக்கத்திற்கு உட்பட்டு இடிந்துள்ளதாகவும் இடிந்த பகுதியில் ஒருவர் சிக்குண்டு மாயமாகி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மலையக பகுதிக்கு பெய்து வரும் கடும் தொடர்ச்சியான மழையினை யடுத்தே இந்த தாழிரக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாழிரக்கம் குறித்து கட்டட ஆராச்சி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானதுடன் இருக்குமாறும்.
மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டு;க்கொண்டுள்ளது.


