முடிவுறாப் பணியின் வெள்ளிவிழா


ந்த நாட்டில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத் துறைகளைச் சார்ந்தவர்களைப் போல் இவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதுண்டு. அத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் உதவும் வகையிலும்;, அந்த எழுத்தாளர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஓர் அமைப்பாக இயங்க வேண்டி இருக்கிறது. அத்தகைய தேவையின் அடிப்படையில் பல அமைப்புகள் இந்த நாட்டில் தோற்றம் பெற்றன. அந்த அமைப்புகள் மொழி வாரியாகவும, இந்த நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் சிங்களம் தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளின் அடிப்படையிலும், பிற்காலத்தில் இனங்களின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றவையாகத்தான் இருந்தன. ஆனால் முற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்தாளர்களால் இந்த நாட்டின் சிங்களத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்த ஒர் அமைப்பின் தேவை உணரப்பட்டது அதன் பிரகாரம் பல்வேறு எழுத்தாளர்களின் அமைப்புகள் சிங்களத் தமிழ் எழுத்தாளர்களை உள்ளடக்கிய நிலையில் காலத்திற்குக் காலம் பல அமைப்புகள் தோற்றம் பெற்றாலும், அவை தொடர்ச்சியாக இயங்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது இதற்குக் காரணம் இந்த நாட்டின் பல்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட சமூக அரசியல் நிலவரங்கள் மற்றும் அரச மட்டத்தில் அவற்றுக்கான தேவையான ஆதரவு கிடைக்காமை போன்ற காரணங்களால் அந்த அமைப்புகள் இயங்க முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் 1994 ஆம் ஆண்டு முற்போக்கு சிந்தனை கொண்ட இலங்கை எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பு என்ற ஒர் அமைப்பை உருவாக்கினார்கள் அதன் அமைப்பு எழுத்தாளர்களுக்கான பிரச்சனைகளைப் பற்றிப் பேசியதோடு, அப்பிரச்சினைகளை தீர்க்கப் பல வழிமுறைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டது. அது இயங்குவதற்குப் பல தடைகள் இருப்பினும் குறிப்பாகத் தொடர்ந்து இந்த அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. அமைப்பின் ஆரம்பக் கர்த்தாக்களாக அரியவன்ஷ ரணவீர, கத்லின் ஜெயவர்தன, ரஞ்சித் தர்மகீர்த்தி, பேராசிரியர் ரோலேன்ட்;அபேபால, பேராசிரியர் சர விஜேசூரியா போன்றவர்கள் சிங்கள மொழி எழுத்தாளர்களாக இருந்தார்கள். மேலும் இந்த அமைப்பின் விரிவான ஒரு செயற்பாடாகச் சிங்களத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதற்குக் குறிப்பாகக் கொடகே புத்தக நிறுவனத்தின் நிறுவனர் சிரிசுமன கொடகே அவர்கள் பெரும் உதவியாக இருந்தார். .இந்த ஒன்றியத்தின் வழியாகத் தமிழ் எழுத்தாளர்களான திக்குவல்லை கமால்,அந்தனி ஜீவா, ஜின்னா சரீப்புதீன் மேமன்கவி சுதாராஜ் , மு.சிவலிங்கம் போன்ற இன்னும் பல தமிழ் எழுத்தாளர்களும் இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பின் பணியில் இணைந்து கொண்டார்கள். இவ்வாறாக உருவாக்கம் பெற்ற இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பு இலங்கை எழுத்தாளர்களுக்கும், இலங்கை இலக்கியத்திற்கும் தன்னால் இயன்ற அளவான வகையில் பணியாற்றி வருகிறது. இலக்கிய வாசகர்களிடையிலான கருத்தரங்குகள், தமிழ் சிங்கள எழுத்தாளர்களுக்கான சந்திப்புகள்,, எல்லா எழுத்தாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எல்லாக் காலத்திலும் ஆட்சிக்கு வரும் அரசுகளுடன் பேச்சு வார்த்தைகள், மற்றும் எழுத்தாளர்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் இப்படியாக இலங்கை எழுத்தாளர்; அமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று இலங்கை எழுத்தாளர்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், அப்பிரச்சினைகளை இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பு அதன் நோக்கங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையிலும் இவ்வமைப்பு தொடர்ந்தும் தனது பணிகளைத் தொடர்கிறது. அதன் காரணமாகத்தான் இந்த வருடம் 2019 ஆம் ஆண்டு முடிவுறாப் பணியின் வெள்ளிவிழா என்ற மகுடத்தின் கீழ்த் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது வெள்ளி விழாவை முன்னிட்டு அதற்கான நிகழ்வில் இந்த அமைப்பு உருவாக்கம் பெற உதவிய தமிழ் சிங்கள எழுத்தாளர்கள் கௌரவிப்பதோடு, தேசிய ரீதியாகச் சில இந்த அமைப்பினால் அறிவிக்கப்பட்ட சிங்களத் தமிழ் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெறும்.; அதைத் தொடர்ந்து; இந்த அமைப்பு இந்த நாட்டுச் சிங்களத் தமிழ் முஸ்லிம் என இந்த நாட்டு எழுத்தாளர் எழுத்தாளர்களின் உரிமைக்காகப் போராடும் ஒர் அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

இவ்வமைப்பின் அமைப்பின் வெள்ளி விழா, எதிர்வரும் 2019 ஆகஸ்ட் 02 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு- 7 ஸ்ரீஜயவர்த்தனபுர வீதியில் அமைந்துள்ள மகாவேலி மைய மண்டபத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர்களான, குணசேன விதான, தெளிவத்தை ஜோசப்,அனுலா டி சில்வா, புர்க்கான் பீ இப்திக்கார் ஜெயகோடி செனவிரத்ன ஆகியோருடன் கலாச்சார திணைக்களத்தின் இயக்குநர் திருமதி அனுஷா கோகுல பெர்னாண்டோவும் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்களாக உத்தியோக அரச கரும மொழிகள் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களும், சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹினிடுகம சுனில் செனெவி அவர்களும் கலந்து கொள்வார்கள்
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா எழுத்தாளர்கள் அமைப்பின் முன்னோடிகளான எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
, இந்த அமைப்பினால் சிங்கள தமிழ் மொழிகளில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டிக்கான விருது வழங்கலும்,தமிழில் நடத்தப்பட்ட சிறுகதை கவிதைப் போட்டிகளில் பின்வருவோர் தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களில் கவிதை சிறுகதைப் போட்டிகளில் முதலாம். இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றவர்களின் பெயர்கள் விழா அன்று அறிவிக்கப்படுவதோடு, ஏனையவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசில்களை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் வழங்கி வைப்பார்..

இறுதிச் சுற்று தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்

கவிதை
ஆசிரியையின் ஒரு நாள் -திருமதி பாஸ்கரகுமாரிபிரமேந்திரராஜா-வவுனியா -

இல்லை அருகில்- மாரிமுத்து சிவகுமார் -அட்டன் -

எனதிருப்பின் முடிவுறா வரலாறு-ஜமீல் - மருதமுனை

கசிந்துருகிய ஜீவன் நிலாந்திசசிகுமார் -யாழ்ப்பாணம்

கடலம்மா கடலம்மா- கொ.பாபு -வவுனியா -

கருவாகி உருவாகி வரும்- துறையூர்றைஸான் - சம்மாந்துறை

காணாமல் ஆக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள்- சகாயம் சஜீபன்-

தாய்மண்- பதியத்தலாவ பாரூக் -பதியத்தாளாவ

பலிப்பிண்டம்- இதயராசன் - கொழும்பு

மரம் பேசுகிறேன்- எம் ஐ.அச்சி முஹம்மது-சம்மாந்துறை

மனிதர்கள் அப்படிதான் -ஸப்னா ஜெய்னுல்ஆபிதீன் -இறக்குவான

லயந்தன்னில் ஓர் சாகசம்- எம்.உமா காயத்திரி - உடுவரை -

வேண்டுகோள்- திருமதி இந்திராணி புஸ்பராஜா - மட்டக்களப்பு



சிறுகதை

ஒற்றைச் சாரம்- ஆர்.பி. யசோதரை, இரத்தினப்புரி

ஒரு பேரூந்து பயணம் போகின்றது.- இதயராசன்- கொழும்பு

மனித நேயத்தால் மலர்ந்த நட்பு -எம்.ஐ..எம். அஷ்ரம்-சாய்ந்தமருது

அவள் புறப்பட்டு விட்டாள்-கொ.பாபு -வவுனியா

ஒரு போராளி கோடங்கி பூசாரியும் பொ.புஸ்பராஜூ- கொழும்பு

வாழ்க்கை ரணங்கள்- ச.முருகானந்தன்- கொழும்பு

மயானபூமி - சந்திரகாந்தா முருகானந்தன் வெள்ளவத்தை

நேர்மையின் பாதையில் ஒரு மைக்கல்-சூசை எட்வேட்- திருகோணமலை

இதுவும் ஒரு சங்கமம்- திருமதி இந்திராணி புஷ்பராஜா- மட்டக்களப்பு

உள்ளும் புறமும்- திருமதி சரஸ்வதி முருகையா- கலஹா

பசி-மலரன்னை-யாழ்ப்பாணம்

ஐக்கியத்தின் முகவரி - மௌளவி காத்தான்குடி பௌஸ் பாணந்துறை

சங்கமம்- வே.உமாபதி, கல்முனை

முடிவுறாப்; பணியின் வெள்ளிவிழா மேலும் சிறப்பிக்க, எமது இந்தப் பயணத்தில் பங்களாளராகக் கலந்து சிறப்பிக்க உங்கள் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்பாட்டுக் குழு: இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பு, 119, ஏ, பொல்ஹேனா, களனிய
தொடர்புகள்: செயலாளர் - 0773655151 , தலைவர் - 071-7155951, உப செயலாளர் (மேமன்கவி)- 0778681464.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -