மருதூர் சபைக்கான அங்கிகாரமான உறுப்பினர் பதவிகளை ஏன் சுழற்சி முறைக்கு உட்படுத்த முடியாது ?


 ஆலோசனை வழங்குகிறது சாய்ந்தமருது மாளிகைகாடு இளைஞர் தலைமைத்துவ பேரவை

ல வருடங்களாக மருதூர் உள்ளுராட்சிக்கான கோரிக்கை வலுவடைந்து வந்தபோதும், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாத எழுச்சியின் பிற்பாடு போராட்டம் புதியதொரு வடிவத்தில் பரிணாமித்து, பூரண மக்கள் மயப்படுத்தப்பட்டு, மருதூர் மாளிகா மக்களின் ஆண், பெண்களின் அர்ப்பணிப்புடன் கட்சி பேத வேறுபாடின்றி முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் புத்திஜீவிகள் தொடக்கம் பாமர மக்களின் பங்களிப்பு வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர் அமைப்புக்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் பங்களிப்புகள், வண்டில் மாடு சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு சகலரினதும் கவனத்தை ஈர்த்த வண்டில் மாட்டு பேரணி மற்றும் மீனவ, விவசாய சங்கத்தின் பங்களிப்புக்கள் மூச்சக்கர வாகன சங்கத்தின் பேரணி இவற்றுக்கும் எல்லாம் ஒரு படி மேலாக வர்த்தகர் சங்கத்தின் நிதி மற்றும் ஆளணி பங்களிப்புக்களும், மாதர் சங்கங்களின் ஒன்றுகூடலும், வீட்டுக்குவீடு பெண்களுக்கான பிரச்சாரங்களும் போராட்டத்தின் ஆணிவேராக போராட்டத்தை வலுப்பெற வைத்து, தேர்தலிலும் வெற்றி கண வைத்து, மொத்தமாக கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை உட்பட ஏழு ஆண்களும் மூன்று பெண் உறுப்பினர்களையும் மருதூர் மாளிகா மக்கள், அவர்களின் மருதூர் உள்ளுராட்சி சபைக்கான முழு ஆதரவையும் வழங்கி உள்ளுராட்சி சபைகளுக்கு அனுப்பினார்கள். பள்ளிவாசலின் நெறிப்படுத்தலில் களமிறங்கிய மருதூர் மாளிகா சுயேட்சை அணிக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குகளும் மருதூர் உள்ளுராட்சி சபைக்கான அங்கீகாரமே தவிர, வேறு எந்தவிதமான நோக்கத்திற்காகவும், சுயேட்சையில் களமிறங்கியவர்களின் தனிப்பட்ட செல்வாக்கிற்கோ! அல்லது அவர்களின் குடும்ப செல்வாக்கிற்காக விழுந்த வாக்குகள் அல்ல என்பதை தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் மருதூர் எழுச்சியின் போது முக்கிய வகிபாகத்தை அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, எனினும் அவர்களுக்கிடையான விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் தான் தற்போதயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள், அவர்கள் விட்டுக்கொடுப்புக்கள் பெரிதும் மதிக்கத்தக்கவகைகள்.
மருதூர் உள்ளுராட்சி சபைக்கான முன்னெடுப்புகளும்; கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதும், குறித்த நபர்கள் சபை உறுப்பினராக இருந்தால் தான் சபையை பெறமுடியுமென யாரும் கூறுவார்களாயின் அதற்கு அவர்களின் அறியாமையே காரணம், ஏனெனில் கல்முனை மாநகர சபையில் நிதிக்குழுவை கைப்பற்ற வியூகம் அமைத்த நாம், இன்னமும் மருதூர் சபைக்கு ஆதரவான ஒரு பிரேரணையை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றமை வருத்தத்தை தருகின்றது. ஆயினும் இரண்டு வருட காலத்தை அண்மித்த போதிலும் இதற்கான எந்தவித பூர்வாங்க முன்னேடுப்புக்களும் நடைபெறாமல் இருக்கும்போதும், கட்டாயமான பெண்கள் நியமனத்திற்கு, நியமிக்கப்பட்ட பெண்கள் உறுப்பினர்களை மட்டும் சுழற்சி முறையில் வழங்குவதற்கு அவர்களை கட்டாயப் படுத்துவது ஒரு சிறந்த நடவடிக்கையும் அல்ல, இது ஆண் மேலாதிக்கத்தால் நியதியற்று நடப்பது கண்டிக்க தக்கது, நியமிக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மருதூர் சபைக்கான போராட்டத்தில் முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள் என்பதில் சந்தேகமில்லை, சில தெரிவு செய்யப்பட்ட ஆண் உறுப்பினர்களின் பங்களிப்பை விட கூடுதலாகவே அவர்களின் பங்களிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான அவர்களின் தியாகங்களுக்கு மத்தியில், அவர்களை மாத்திரம் பதவியிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துவது எந்தவிதத்திலும் நியாயமான செயற்பாடு இல்லை, நியாயாப்படுத்தவும் முடியாது.
மாறாக மருதூர் மாளிகா உறுப்பினர்கள் அனைவரும் தனது பதவிகளை சுழற்சி முறையில் தேர்தலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க முன் வருவார்களானால், விட்டுக் கொடுத்தவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிப்பதாக அமைவது மட்டுமல்லாமல், உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றங்களுக்கும் பதில் கொடுப்பதாகவும் அமையும். இதே சுழற்சி முறையான செயற்பாடு தேசிய நல்லாட்சிக்கான இயக்கத்திடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -