திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1990 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சனிக்கிழமை (20) உத்தரவிட்டார்.
இடிமன்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹெரொயின் போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளதாகவும்,ஹெரொயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போதே 1990 மில்லிகிராம் ஹெரொயினுடன் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
