300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்தை முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கலாநிதி சீ.வி.விக்னேஸ்வரன் 300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளதாக வெளியிட்ட செய்தி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவை பாதிக்கின்றது என கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெறிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால் உடனடியாக அது தொடர்பில் ஆராய்ந்து இந்தக்கிராமங்களை நாங்கள் முடியுமான வரை தமிழ் மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழ், முஸ்லிம் தலைமைகள் மத்தியிலே இருக்கிறது.
அதே போன்று பல முஸ்லிம் கிராமங்கள் தமிழ் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்புக்களினாலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.எனவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் இவ் அறிக்கையினை வெளியிட்டிருப்பார் என நினைக்கவில்லை.
ஆகவே முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது மதிப்பையும், மரியாதையும் முன்னிட்டு உடனடியாக இந்த 300 தமிழ் கிராமங்கள் எந்த மாவட்டத்தில் எங்குள்ள தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது என்ற விபரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்துமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.உங்கள் மீது நான் என்றும் மரியாதை வைத்துள்ளேன், உங்களின் கருத்தை நான் மதிக்கின்றேன். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து முஸ்லிம் தலைமைகள் இறுதித்தீர்மானத்தினை எடுக்கவேண்டியுள்ளதால் உடனடியாக தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்ட விபரத்தினை வெளியிடுமாறு முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்.பஹ்த் ஜுனைட்-