அவரோடு நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம். ராம், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகதர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
9.28 கிலோ மீற்றர் கார்பெட் வீதி 32 கோடி ரூபா செலவில் முடிவடைந்து மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு.
அட்டன் செனன் வெலிஓயா தோட்டத்தின் ஊடாக வட்டவளை நகருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்பட்டு நேற்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம் தலைமயில் நடைபெற்ற திறப்பு விழாவில் ஐ.தே.க. தவிசாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
