பாதுகாப்பு செயலாளராக நான் ஜனாதிபதியுடன் தொடர்பை ஏற்படுத்தவே கடும் சிரமங்களை சந்தித்தேன். ஒரு சுதந்திரம் இல்லாத செயலாளராகவே நான் செயற்பட்டேன். பாதுகாப்புக் குழுக் கூட்டங்களுக்கு பிரதமரையோ, பொலிஸ்மா அதிபரையோ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரையோ அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கண்டிப்பான கட்டளையிட்டிருந்தார் என முன்னாள் பாதுகப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை தெரிவிக்கும் வகையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க கடந்த வியாழக்கிழமை வரவழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வாக்குமூலம் வருமாறு,
கேள்வி :- நீங்கள் எப்போது பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படீர்கள்?
பதில்:- 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டேன். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி எனது பதிவியில் இருந்து நான் இராஜினாமா செய்தேன்.
கேள்வி:- நீங்கள் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட காலத்தில் தேசிய பாதுகாப்பு சபை எத்தனை தடவை கூடியது?
பதில்:- நான் பொறுப்பேற்ற பின்னர் பாதுகாப்பு சபை நான்கு தடவைகள் கூடியது. முதல் தடவையாக 2018 நவம்பர் 13 ஆம் திகதி , இரண்டாவது தடவையாக டிசம்பர் 3 ஆம் திகதி, மூண்டாவது தடவையாக 2019 ஜனவரி 4ஆம் திகதியும் இறுதியாக பிப்ரவரி 19ஆம் திகதியும் கூடியது.
கேள்வி:- ஜனாதிபதி செயலகத்தின் ஊடக அறிக்கையொன்றில் பார்த்தேன், அதில் தேசிய பாதுகாப்பு குழுவாக கூடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் இதுவும் வெவ்வேறானதா?
பதில்:- ஜனாதிபதிக்கு, நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு எந்தவொரு கூட்டத்தையும் பாதுகாப்பு செயலாளரின் ஊடாக கூட்ட முடியும். நான் இருத்த காலத்தில் பல கூட்டங்கள் பல பெயர்களில் கூட்டப்பட்டது. ஆனால் பாதுகாப்பு குழுக் கூட்டம் என்ற அடிப்படையில் இந்த நான்கு கூட்டங்கள் மட்டுமே கூட்டப்பட்டது என நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
கேள்வி:- பாதுகாப்பு குழுவாக எந்தவொரு கூட்டமும் வேறு விதத்தில் கூட்டவில்லையா?
பதில்:- நான் அறிந்த வகையில் அவ்வாறு ஒரு கூட்டம் கூட்டப்படவில்லை.
கேள்வி:- நீங்கள் இல்லாது ஏதேனும் கூட்டம் கூட்டபட்டதா?
பதில்:- நான் இல்லாது ஒரு கூட்டம் கூட்ட முடியாது, வெவ்வேறு காரணிகளுக்கு பல கூட்டங்கள் கூட்டப்பட்டது. அதில் நானும் கலந்துகொண்டேன். ஆனால் பாதுகாப்பு கூட்டமாக பிரத்தியேகமாக கூட்டவில்லை.
கேள்வி:- 2018 ஆண்டில் இருந்து கூடிய பாதுகாப்பு கூட்டங்களில் அப்போதைய பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்திருப்பீர்கள் அல்லவா?
பதில்:- இல்லை, இந்த எந்த ஒரு கூட்டத்திற்கும் பிரதமரை அழைக்கவில்லை.
கேள்வி:- ஏன், அப்போது பிரதமரை அழைக்கவில்லையா.
பதில்;- இல்லை, இல்லை நான் கூறுகிறேன் கேளுங்கள்,
கேள்வி:- அப்போது பிரதமர் யார்?
பதில்:- அப்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார்.
கேள்வி:- அவரை அழைக்கவில்லையா?
பதில்:- இல்லை, அழைக்கவில்லை
கேள்வி :- ஏன் அழைக்கவில்லை?
பதில்:- அதற்கான காரணம் எனக்கு தெரியாது, பாதுகாப்பு கூட்டங்களுக்கு யாரை அழைப்பது என்பதை ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும். அப்போதெல்லாம் குறுகிய நேர அழைப்பின் பெயரில் நபர்கள் அழைக்கப்படுவார்கள். காலையில் கூறி பிற்பகல் கூட்டம் நடக்கும், முதல் கூட்டத்தின் போதே நான் கேட்டேன்," ஜனாதிபதி அவர்களே ஏன் பிரதமரை அழைக்கவில்லை" என வினவினேன். அழைக்க வேண்டியதில்லை, நான் கூறுவதை மட்டும் செய்தால் போதும் என ஜனாதிபதி கூறினார். அன்றில் இருந்து நான் கேட்பதில்லை.
கேள்வி:- அப்படியென்றால் நான்கு கூட்டத்திற்கும் பிரதமர் இருக்கவில்லையா?
பதில்:- இல்லை.
கேள்வி:- நான்கு கூட்டங்களிலும் பொலிஸ்மா அதிபர் இருக்கவில்லையா?
பதில்:- நான் பதவியேற்ற பின்னர் கூட்டப்பட்ட முதல் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் இருந்தார், ஆனால் அதற்கு முன்னர் இருந்து அவர் கூட்டங்களுக்கு வரவில்லை என்ற தகவலும் எனக்கு கிடைத்தது.
கேள்வி:- ஒக்டோபர் 23 ஆம் திகதியில் இருந்து அவர் எந்தவொரு பாதுகாப்பு கூட்டங்களுக்கும் செல்லவில்லையே?
பதில்:- ஒக்டோபர் மாதம் நான் செயலாளராக இருக்கவில்லையே,
கேள்வி:- இல்லை, அவர் அன்றில் இருந்து எந்தவொரு பாதுகாப்பு கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என்று கூறினாரே?
பதில்:- எனது நினைவில் இருக்கும் காரணிகளின் படி நான் கூட்டிய முதல் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். ஏனென்றால் பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்யும் நடவடிக்கைகள் இருந்த காரணத்தினால் அதில் சில காரணிகளை ஆராய அவரும் கலந்துகொண்டிருந்தார். உண்மையில் இதற்கு பின்னர் பொலிஸ்மா அதிபரை பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறினார். ஏனென்றால் அன்றைய கூட்டத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்ற சில காரணிகள் காரணமகாக இவரை அழைக்க வேண்டாம் என்றார்.
கேள்வி:- யார் அந்த பொலிஸ் அதிகாரி?
பதில்:- நிஷாந்த சில்வா
கேள்வி:- பிரதமர், பொலிஸ்மா அதிபர் இல்லாது வேறு யாரை அழைக்கவில்லை?
பதில் :- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரயையும் அழைக்கவில்லை.
கேள்வி:- பாதுகாப்பு கூட்டங்களுக்கு நபர்களை வரவழைக்கும் பொறுப்பு யாருடையது?
பதில்:- ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு செயலாளர் காரியாலயம் அழைப்பு விடுக்கும்.
கேள்வி:- யார் கலந்துகொண்டனர்?
பதில்:- பாதுகாப்பு படைகளின் பிரதானிகள். படை தளபதிகள், புலனாய்வு அதிகாரிகள், வேறு சிலர் உள்ளனர். நிதி அமைச்சின் செயலாளர், வெளிநாட்டு அமைச்சின்செயலாளர், ஜனாதிபதி செயலாளர்.
கேள்வி:- மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு பாதுகாப்பு கூட்டங்கள் இருந்தது அதில் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லையா?
பதில்;- பெயர் குறிப்பிட்டு வேண்டாம் என கூறவில்லை, ஆனால் பிரதமர் அவசியம் இல்லை என கூறினார்.
கேள்வி:- பாதுகாப்பு கூட்டங்கள் வாராந்தம் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா? உரிய நேரத்தில் நடந்தது என்று தெரியுமா?
கேள்வி:- வரலாற்றில் குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில் வாராந்தம் சரியாக கூட்டங்கள் இடம்பெறும், அதன் பின்னரும் முறையாக பாதுகாப்பு கூட்டங்கள் இடம்பெற்றது என்பது எனக்கு தெரியும். உரிய நேரங்களில் நடந்ததா என்பது குறித்து எனக்கு முறையான பதில் ஒன்றினை கூற முடியாது. நான் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலங்களில் குறுகிய கால அழைப்பின் பெயரில் கூட்டங்கள் கூட்டப்பட்ட காரணத்தினால் நேரங்களில் குழப்பங்கள் இருந்தது.
கேள்வி:- பாதுகாப்பு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய நபர்களின் பெயர்களை கூறாது, யார் வரக்கூடாது என்ற நபர்களின் பெயரையே கூறுவதா?
பதில்:- ஆம்,
கேள்வி;- அப்படியியாயின் இதில் தெரிவது என்னவென்றால் பெயர் பட்டியல் ஒன்று உள்ளது, அதில் கலந்துகொள்ள வேண்டிய நபர்கள் தவிர்ந்து ஏனையவர்கள் நிராகரிக்கப்பட்டனர் அல்லவா?
பதில்:- ஆம் அவ்வாறு தான்.
கேள்வி:- இந்த தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்ற காரணி உங்களுக்கு கிடைத்தது எப்போதில் இருந்து?
பதில்:- இந்த தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்ற தலவல் எனக்கு ஏப்ரல் 8 ஆம் திகதி கிடைத்தது. அரச புலனாய்வு பிரதானி, தேசிய புலனாய்வு அதிகாரிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார், அது 7ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்த கடிதம் அது 8 ஆம் திகதி கிடைத்திருந்தது.

அன்றைய தினம் காலையில் இருந்து நாம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தோம். இந்திய பாதுகாப்பு செயலாளர் வந்திருந்த காரணத்தினால் அது குறித்த வேளைகளில் ஈடுபட்டிருந்தோம். எனினும் பிற்பகல் சிசிர மென்டிஸ் எனக்கு இது குறித்து அறிவித்திருந்தார். அவர் எனது அலுவலக காரியாளையதில் இருந்தார். அப்போது என்ன கடிதம் என கேட்டேன், அதற்கு " இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் தாக்குதல் ஒன்று குறித்த தகவல்' என்றார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என கேட்டேன். 9 ஆம் திகதி இதனை புலனாய்வு மீளாய்வு கூட்டத்தில் பேசுங்கள் என்று கூறினேன்.
எனினும் 9 ஆம் திகதி தேசிய புலனாய்வு அதிகாரி இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எனினும் குறித்த கடிதம் தொடர்பில் இன்று பேசவேண்டும் என்ற சிசிர மென்டிஸிடம் நான் கூட்டத்தில் கேட்டேன். அப்போது அவர் அருகில் இருந்த அரச புலனாய்வு பணிப்பாளரிடம் எதோ பேசினார்.
அதன் பின்னர் அவர் கூறினார் இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது, மேலதிகள் தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கின்றோம் என்றார். ஆனால் அது அனைவரும் கவனித்தார்கள் என நான் நம்பவில்லை. 8 ஆம் திகதி எனக்கு கடிதம் கிடைத்தது. ஆனால் 4 ஆம் திகதி புலனாய்வு தகவல் கிடைத்தது என்றால் எனக்கு கிடைத்த வாராந்த அறிக்கையில் ஏன் இது உள்ளடக்கப்படவில்லை என்ற கேள்வி இருந்தது. ஆகவே இந்த உளவு தகவலில் நம்பிக்கையில்லை என நான் கருதினேன்.
முக்கிய காரணிகள் குறித்து 9 ஆம் திகதி மீளாய்வு கூட்டத்தில் பேசவும் இல்லை. எனவே இதில் முடன்பாடுகள் இருந்தது. இலங்கை புலனாய்வு துறை இது குறித்து ஆராய்ந்து முழுமையான தகவல் ஒன்றும் அனுப்பாது 4 ஆமன் திகதி கிடைத்த தகவலின் பிரதியை அணிப்புனர்.
விசாரணை குழு உறுப்பினர் சரத் பொன்சேகா :- செயலாளர் அவர்களே " வெளிநாட்டில் இருந்தோ அல்லது வேறு ஒரு வகையிலோ உளவுத்துறை தகவல் ஒன்றையே வழங்கியுள்ளனர். அவர்கள் ஆராய்ந்தே உளவு தகவலை இங்கு வழங்குவார்கள். சாதாரணமாக வெளிப்படையான தகவல் ஒன்றை வழங்க மாட்டார்கள் தானே, அவர்களும் இரகசியம் காப்பார்கள் தானே, அவர்கள் வழங்கிய உளவு தகவலை நம்பி நாம் செயற்பட வேண்டும். அதின் உண்மைத்தன்மையை எம்மால் தேட முடியாது. எவ்வாறு இருப்பினும் நீங்கள் இந்த உளவு தகவலுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதை ஏற்றுகொள்கின்றீர்களா?
செயலாளர்:- ஏற்றுக்கொள்கிறேன்.
கேள்வி:- உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் தொடர்பு எவ்வாறு இருந்தது?
பதில்:- நல்ல கேள்வியை கேட்டீர்கள். நான் பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் புலனாய்வு தகவல் ஒன்றினையும் ஏனைய கோப்புக்களையும் கொண்டு சென்று ஜனாதிபதியிடம் கூறினேன், ' என்ன தகவல்' என்று கேட்டார். நான் புலனாய்வு தகவலை கூறியவுடன் " ஹா, இது எனக்கு புலனாய்வு பணிப்பர்கள் தெரிவித்துவிட்டார்.

இது முக்கியமில்லை விடுங்கள்' என்றார். இரண்டு நாட்களின் பின்னர் புலனாய்வு அதிகாரிகள் எனக்கு வழங்கிய தகவலை மீண்டும் அவரிடம் கூறினேன். அப்போதும் அவர் கணக்கெடுக்கவில்லை. புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். அதன் பின்னர் ஐந்து மாதகாலமாக நான் எந்தவொரு புலனாய்வு தகவலையும் கூறவில்லை. ஏனென்றால் புலனாய்வு அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியான தொடர்புகள் உள்ளதை அறிந்து கொண்டேன்.
இதனை புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்டு உறுதிப்படுத்தியும் கொண்டேன். நான்கு ஆண்டுகளாக இவ்வாறு நேரடியாக தகவல்கள் பரிமாருகின்றது என அவர்கள் உறுதிப்படுத்தினர். ஏனைய அதிகாரிகளுக்கு வாராந்த அறிக்கை வழங்கினாலும் அதற்கு புறம்பாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாக கூறனார்.
கேள்வி:- என்.டி.ஜே குறித்து இந்த காலத்தில் உங்களுக்கு அறியப்படுத்த வில்லையா?
பதில்:- உண்மையில் இந்த தவ்ஹித் ஜமா அத் குறித்து இந்த ஐந்து மாதங்களில் நான்கு அல்லது ஐந்து தடவைதான் அறியப்படுத்தியிருந்தனர்.
கேள்வி:- அது போதாதா?
பதில்:- பதில் இல்லை ( சிரிப்பு)," அதேபோல் தமது மத நடவடிக்கைகள் மற்றும் மாற்று மதத்தவரை இடையூறு செய்வது என்ற காரணிகளை தான் கூறியிருந்தனர். அது தவிர்ந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை".
கேள்வி:- ஏனைய மதத்தவரை இடையூறு செய்வது என்றால் அது பயங்கரவாத செயற்பாடு இல்லையா?
பதில்:- ஆனால் பயங்கரவாதம் என கூறியிருக்கவில்லை
சரத் பொன்சேகா :- அப்படியென்றால் மாற்று மதத்தவரை இடையூறு செய்வது என்றால் என்ன ?
செயலாளர் :- சிரித்தபடி மௌனம் காத்தார்.
கேள்வி:- தௌஹித் ஜமா அத் ஏனைய மதத்தவரை இடையூறு செய்யவுள்ளனர் என உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேசப்பட்டது தானே?
பதில்:- இல்லை, நாங்கள் பேசவில்லை. அறிக்கையில் சஹாரான என்பவர் குறித்தும் ஜிஹாத் விடயங்களால் குறித்தும் அறிவிக்கப்பட்ட அறிக்கைகளை பார்த்தேன். அவற்றை ஜனாதிபதி பார்தாராக இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. எஸ்.ஐ.எஸ் அதிகாரி நேரடியாக தொடர்பில் இருந்தார் தானே.
கேள்வி:- எவ்வாறு இருப்பினும் எஸ்.ஐ.எஸ் அறிக்கையில் தாக்குதல் குறித்து இருந்தது தானே?
பதில்:- அந்த கடிதத்தில் பாருங்கள், " கத்தோலிக்க ஆலயங்கள், இந்திய தூதரகம் தாக்கப்படலாம் " என்றே உள்ளது. நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம் என்று அர்த்தப்படுகின்றது.
விசாரணைக்குழு உறுப்பினர் ராஜித:- தொடர்ந்து வாசியுங்கள், " என்றாலும் ஏனைய மதத்தவர்களுக்கு இடையூறு ஏற்படும்' என்று உள்ளது. அதேபோல் சிசிர மென்டிஸ் அனுப்பிய கடிதத்தை பாருங்கள் 'இந்திய தூதரகம், கத்தோலிக்க ஆலயங்கள் அண்மையில் தாக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது" என்று கூறியுள்ளார்.
செயலாளர்:- என்றாலும் இவ்வான அறிக்கைகள் வரும்போது சிவில் அதிகாரிகளின் கடமையை நான் செய்தேன். அனுப்பவேண்டிய உரிய நபர்களுக்கு அனுபியுள்ளேன். பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பினேன்.
ராஜித:- எப்படி இருந்தாலும் சிரிர மென்டிஸ் கூறுயது தான் நடந்தது. அவர் கூறியது இந்திய உயரிஸ்தானிகர் ஆலையம் கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலபடுதிக்கொண்டது. ஏனைய இடங்களை பாதுகப்ப அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
செயலாளர்:- என்றாலும் புலனாய்வு துறைக்கும் இராணுவ புலனாய்வுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் மோசமானதாக இருந்தது. இராணுவம் புறக்கணிக்கப்படுவதாக இராணுவ தளபது என்னிடம் தெரிவித்திருந்தார். தாம் கூறுவதை அரச புலனாய்வு அதிகாரி கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறினார். எனினும் சற்று அமைதியாக இருங்கள் நாம் இது குறித்து பேசி ஒரு தீர்மானம் எடுப்போம் என்றேன். அதில் கூறிய சில விடயங்களை ஊடகங்கள் முன்னிலையில் என்னால் கூற முடியாது.
கேள்வி:- நீங்கள் கலந்துகொண்ட பாதுகாப்பு கூட்டங்களில் என்.டி.ஜே குறித்து பேசவில்லையா
பதில்:- அவ்வாறு பேசியதாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் மதுஸ் குறித்து அளவுக்கு அதிகமாகவே பேசப்பட்டது.
ராஜித :- அப்படியென்றால் நீங்கள் கூறுவதை போல பாதுகாப்பு கூட்டங்களில் ஜனாதிபதிக்கு எது அதிகம் பிடித்ததோ அதையே பெசியுலீர்கள்.
செயலாளர்:- இந்த விடயங்களை கூறுவது சரியா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் கூறுகின்றேன், நான் பார்க்கும் கோணத்தில் இந்த பாதுகாப்பு கூட்டங்களை முன்னர் நடந்ததை விட தேசிய பாதுகாப்பு குறித்த எந்த விடயமும் இவற்றில் பேசப்படவில்லை. இதில் "ஸ்பேயர் கன்"மூலமாக மீன் பிடிப்பதும், ட்ரோன் கமரா மூலமாக தாக்குதல் நடத்துவது பற்றி பேசினார்கள். இவற்றை எல்லாம் கேட்டு நான் குதுகலமாக வேடிக்கை பார்த்தேன். அது தவிர்ந்து வேறு முக்கியமான விடயங்கள் பேசப்படவில்லை.
கேள்வி:- அரச புலனாய்வுத்துரைக்கும் செயலாளருக்கும் இடையில் தொடர்புகள் எவ்வாறு உள்ளது, உங்களில் கீழ் உள்ள ஒரு நிறுவனம் தானே ?
பதில்:- ஆம் வர்த்தமானி படி எனது அதிகாரத்தின் கீழ் என்றாலும் செயற்பாடுகள் முழுவதும் ஜனாதிபதியுடன் தான் இருந்தது.
கேள்வி:- முதலும் அப்படி இருந்ததா ?
பதில்:- பாதுகாப்பு செயலாளர் என்று பார்த்தல் எனக்கும் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருந்தது. கோதாபய ராஜபக் ஷ உத்தியோகபூர்வமற்ற பாதுகாப்பு அமைச்சர். நான் ஒரு அப்பாவியான செயலாளர்.
கேள்வி:- நீங்கள் தபால் அமைச்சின் செயலாளராக செயற்பட்ட கலாத்தில் இருந்ததற்கும் இப்போது பாதுகாப்பு செயலாளராக இருப்பதற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையா?
பதில் :- பதவியில் வேறுபாடுகள் இருந்ததில்லை செயலாளரின் வேலை ஒன்றுதான். ஆனால் தபால் செயலாளராக இருந்த காலத்தில் நானும் கோட்டபாய ராஜபக ஷ போன்று தான் இருந்தேன் ( சிரித்தார் )
கேள்வி:-அப்படியென்றால் மாதத்திற்கு ஒரு தடவை பாதுகாப்பு அமைச்சரை சந்திக்கக்கூட உங்களால் முடியவில்லையா?
பதில்:- மாதத்திற்கு அல்ல இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது சந்தித்து பேசுவது கடினமாக இருந்தது. சில கோப்புகளில் கையொப்பம் வாங்க மூன்று மணி நேரம் கூட காத்திருப்பேன். அவரை சந்திக்க அவ்வளவு கடினமாக இருந்தது.
கேள்வி :- உங்களுக்கு தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததா?
பதில்:- ஆம் தாகுதலுக்கு முதல் நாள் தகவல் கிடைத்தது, நான் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தேன். எஸ்.ஐ.எஸ் அதிகாரிக்கு மீண்டும் தொடர்பு கொண்டேன், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் நிலைமைகள் மோசமானது என்பது எனக்கு தெரிந்தது. ?. 21 ஆம் திகதி காலையிலும் மெதடிஸ் ஆலயங்கள் குறித்து பினவப்பட்டது. என்றாலும் நான் பௌத்தன் என்பதால் எனக்கு அது தெரிந்திருக்கவில்லை. என்றாலும் பின்னர் உரிய அதிகாரிகளை அறிவித்தேன்
கேள்வி:- தாக்குதல் நடந்த நேரம் ஜனாதிபதி நாட்டில் இல்லை, நீங்கள் தான் உளீர்கள் உங்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனாதிபதியை தொடர்புகொள்ள முடியவில்லை.
பதில்:- இதனை நான் தனியாக கூறுகின்றேன்.
சுமந்திரன் :- தனியாக எதனை கூறவேண்டும் எதனை கூறக் கூடாது என்பது நாங்கள் தீர்மானிக்கின்றோம். தேசிய பாதுகாப்பு விடயம் அல்ல இது. நீங்கள் கூறுங்கள் என்ன நடந்தது. ஏன் நீங்கள் ஜனாதிபதிக்கு கூறவில்லை?
பதில்:- நான் கூறவில்லை, எஸ்.ஐ.எஸ் அதிகாரி கூறியிருப்பார் என நம்பினேன். அதுதான் வழமையாக நடந்ததும் கூட.
கேள்வி:- 9 ஆம் திகதி தகவல் கிடைத்தும் 21 ஆம் திகதி வரையில் காரணிகளை கண்டறிய காலம் இருந்தது தானே?
பதில்:- இதனை முழுமையாக நான் ஏற்றுகொள்ள முடியாது. உறுதியாக எந்த காரணியும் கூறவில்லை.
கேள்வி:- இருந்தாலும் 20 ஆம் திகதி 21 ஆம் திகதிகளில் தாக்குதல் எதோ நடக்கப்போகின்றது என்பது தெரிந்துள்ளது தானே, 9 ஆம் திகதியில் இருந்து 21 ஆம் திகதி வரை நீங்கள் ஜனாதிபதி தொடர்புகொள்ளவே இல்லையா?
பதில்:- எஸ்.ஐ.எஸ் அதிகாரி கூறுவார் என நினைத்தேன்.
கேள்வி:- நீங்கள் ஏன் பிரதமரை தொடர்புகொள்ளவில்லை?
பதில்:- இல்லை, நான் சுதந்திரமான செயலாளர் அல்ல, நான் ஜனாதிபதிக்கு கட்டுப்பட்ட செயலாளர். எனக்கு பிரதமரை தொடர்புகொள்ள அனுமதிகள் வழங்கவில்லை.
கேள்வி:- தாகுதளின் பின்னர் பிரதமர் பாதுகாப்பு கூட்டங்களை கூட்ட கோரிக்கை விடுத்தும் ஏன் அதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை?
பதில்:- அதற்கு கலந்துகொள்ள வேண்டாம் என ஜனாதிபதியின் அறிவிப்பு கிடைத்தது. அதனால் நாம் போக முடியவில்லை.
கேள்வி:-பாதுகாப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருந்தார்களா யார் யார் இருந்தனர்?
பதில்:- இருந்தனர், மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால, தயாசிறி ஜெயசேகர, லசந்த அழகியவன்ன
கேள்வி:- அவர்கள் கலந்துகொள்ள முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா ?
பதில்:- ஆம்.
கேள்வி :- நீங்கள் ஏன் பதவியை இராஜினாமா செய்தீர்கள்?
பதில்:- உண்மையில் 24 ஆம் திகதி அளவில் பொலிஸ்மா அதிபர் என்னை தொடர்புகொண்டார், இவ்வாறு என்னை குற்றத்தை ஏற்றுக்கொண்டு பதவி நீங்க ஜனாதிபதி வலியுறுத்தினர், தூதுவர் பதவியும் தருவதாக கூறினார். நான் என்ன செய்வது என்று விளங்கவில்லை எனக்கு ஆலோசனை ஒன்று தாருங்கள் என்றார். என்னால் இதற்கு ஆலோசனை வழங்க முடியாது என்று கூறினேன். பின்னர் ஜனாதிபதிக்கு தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் தரக் கோரினேன். அடுத்தநாள் சந்திக்க நேரம் கிடைத்தது. 15 நிமிடங்கள் நேரடியாக பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்போதே நான் ஒரு முடிவில் இருந்தேன். பொலிஸ்மா அதிபரை நீக்கியதை போலவே எனக்கும் நடக்கும் என்று தெரிந்தது. ஆனால் ஒன்றை கூற வேண்டும் ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி நீங்க கூறவில்லை. அவர் ஊடகங்கள் முன்னாள் முழுப் பொய்யை கூறினார்.
ஆணைக்குழு :- உங்களின் வார்த்தைகளை சற்று கருத்தில் கொள்ள வேண்டும். ஜனாதிபதியை அவ்வாறு கூறுவதில் கவனம் வேண்டும்.
சுமந்திரன் , ஆசு மாரசிங்க :- இல்லை அவரது வார்த்தைகளில் கூறட்டும். அது தான் சரி
செயலாளர்:- சரி நான் கவனத்தில் கொள்கிறேன், அதன் பின்னர் நானே பதவி விலகுவதாக கூறினேன். அதை கேட்டு ஜனாதிபதி மகிழ்ச்சியடைந்தார். அதனை நான் அறிந்தேன்.
கேள்வி:- ஜனாதிபதி குற்றவாளி என்று நினைகின்றேர்களா ?
பதில்:- நான் ஜனாதிபதியை குற்றம் சுமத்தவில்லை. ஆனால் குற்றத்துக்கு பொறுப்பு என்று வரும்போது அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் நான் தொடர்ந்தும் செயலாளராக இருக்க வேண்டும் என நினைகல்வில்லை. அதற்கு வேறு காரணிகளும் உள்ளது அவற்றை நான் தனியாக கூறுகின்றேன். பல காரணிகள் நான் செயலாளராக இருந்த காலத்தில் நெருக்கடிகளும் இருந்தது. அவை கூறவேண்டிய காரணிகள் ஆனால் ஊடகங்கள் முன்னிலையில் அவை வேண்டாம். தனியாக கூறுகின்றேன் என்றார் .
ஊடகங்கள் இல்லமல் சுமார் 20 நிமிடங்கள் பாதுகாப்பு செயலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வீகே