தாக்குதல் நடாத்திய சகோதரர்களை ஆண்டவன் மன்னிப்பாராக!


விலீவர்ஸ் ஈஸ்ரன் தேவாலயத்தின் அருட்தந்தை கிருபைநாதன்!
காரைதீவு நிருபர் சகா-
ன்நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள் என ஆண்டவரின் திருவாசகம் கூறுகிறது. எனவே இத்தாக்குதலை நடாத்திய சகோதரர்களை ஆண்டவர் மன்னிப்பாராக.
இவ்வாறு விலீவர்ஸ் ஈஸ்ரன் பெரியகல்லாறு தேவாலயத்தின் வண.அருட்தந்தை ரி.கிருபைநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
இச்சம்பவத்தால் யாரும் வெற்றிபெற்றதாக நினைத்துவிடவேண்டாம். யாரும் யாரையும் குற்றம் காணவேண்டாம். ஆண்டவர் அவர்களைப் பார்த்துக்கொள்வார்.
மரணித்தவர்களை ஆண்டவர் ஏற்றுக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட தாக்குதல்தாரிகளை ஆண்டவர் மன்னிப்பாராக. அவர்களும் சகோதரர்களே. பிழையாக வழிநடாத்தப்பட்டிருக்கக்கூடும். அவர்களுக்கான கூலியை ஆண்டவர் வழங்குவார்.
எனவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒருவரையும் குறைகாணாது அமைதிகாத்து சகோதரத்துவமாக வாழ்வோம்.
சம்பவம் கேள்வியுற்றதும் மட்டு.சியோன் தேவாலயத்திற்கும் போதனாவைத்தியசாலைக்கும் சென்றேன்.

அங்கு இந்துகுருமார்கள் வந்து ஆறுதல்கூறினார்கள். இந்து அமைப்புகள் அங்கு தாகசாந்தி செய்தன. இவைகள்தான் மானிடர்க்கு இப்படியான துர்ப்பாக்கியசந்தர்ப்பங்களில் செய்யவேண்டியவை. அவர்களுக்கு ஆண்டவர் நல்லவாழ்வைக்கொடுப்பாராக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -