உடுநுவரை பூவெலிகடை எம்.எல்.எம். அன்ஸார் எழுதிய "பூவெலிகடை, அன்றும் - இன்றும்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெலம்பொட உதயகந்த தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் எஸ்.யு.எம்.எப். உடையார் கலந்துகொள்ளவுள்ளதுடன் பிரதம பேச்சாளராக விரிவுரையாளரும் பயிற்றுவிப்பாளருமான ஆஷிக் நியாஸ் பங்குபற்றவுள்ளார்.
இந்நூலில் உடுநுவரையில் தேயிலை வியாபாரம், புறக்கோட்டை தேயிலை ஏல விற்பனை, 1950-1960 களில் உடுநுவரையில் தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோர் விபரம் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் சகலரும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.