மருதமுனை மிமா சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நிருவாக சேவை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்ட மருதமுனை,பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீமைப் பாராட்டி வாழ்த்தி கௌரவித்த நிகழ்வு சனிக்கிழமை(23-02-2019)மருதமுனை புளு சி((BLUE C)
மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு இவருக்கு மாலை அணிவித்து வரவேற்று பொன்னாடைகள் போர்த்தி பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மிமா சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட விருந்தினர்களாக ஊவா வெல்லஸ்ஸ பல்ககை;கழகப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றிபாஸ்,பொறியிலாளர் எம்.எஸ்.எம்.பஸீல்,அஸீமின் தந்தை அஹமது சிறாஜூதீன்,ஆகியோருடன் வர்த்தகர்கள்,அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டு இவரைப் பாராட்டி வாழ்த்தி கௌரவித்தனர்.