2019 ம் ஆண்டுக்கான கம்பரெலிய திட்டத்தினூடாக பாரிய அபிவிருத்திகள்


ஆதிப் அஹமட்-
காத்தான்குடி,பாலமுனை,காங்கேயனோடை,ஒல்லிக்குளம்,சிகரம்,ஹைராத்,கர்பலா,பூநொச்சிமுனை,மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் கம்பரெலிய திட்டத்தினூடாக பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் 70 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கம்பரெலியா அபிவிருத்தி திட்டங்கள் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்ட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க குறித்த பிரதேச கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி அந்தந்த பிதேசங்களுக்கான திட்டங்கள் இத்திட்டத்துக்காக தெரிவுசெய்யப்பட்டன.அதன் பின்னர் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன்,இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பிரத்தியேக செயலாளர் அம்ஜத் மௌலனா மற்றும் இராஜாங்க அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் எஸ்.எம்.சப்றாஸ் ஆகியார் குறித்த அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இடங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டு அவதானித்தனர்.இந்த விஜயத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஞ்சந்தொடுவாய் பிரதேச அமைப்பாளர் ஜப்பார்,பூநொச்சிமுனை பிரதேச அமைப்பாளர் அஸீஸ்,ஹைராத் பிரதேச அமைப்பாளர் மஸ்ஹர், கர்பலா பிரதேச அமைப்பாளர் முனாப், காங்கேயனோடை பிரதேச முக்கியஸ்தர்கள் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை(21/02/2019) சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பிரத்தியேக செயலாளர் அம்ஜத் மௌலனா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பில் 70 மில்லியன் பெறுமதியான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பலமான நிலையில் உள்ளதனாலும் மட்டக்களப்பு மாவட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா அவர்கள் இந்த அரசாங்கத்தின் முக்கியமான ஒருவராக காணப்படுவதன் காரணமாகவும் இந்த முறை கம்பரெலியா அபிவிருத்தி திட்டத்தில் மிக அதிகமான நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அவரின் மூலமாக பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -