க‌றுப்பு நிற‌ அபாயா என்ப‌து அரபு பெண்களின் ஆடையல்ல. ஜீச‌சின் தாயார், ம‌ர்ய‌ம் என‌ப்ப‌டும் மேரி இத்த‌கைய‌ ஆடைக‌ளையே அணிந்தார்


 - முபாரக் அப்துல் மஜீட் மெளலவி-
எஸ்.அஷ்ரப்கான்-
க‌றுப்பு நிற‌ அபாயா என்ப‌து அர‌புப்பெண்க‌ளின் க‌லாசார‌ ஆடைய‌ல்ல‌. மாறாக அந்த ஆடை முஹ‌ம்ம‌து ந‌பிக்கு முன்பே உல‌கில் வாழ்ந்த‌ உத்த‌ம‌ பெண்க‌ளின் ஆடையாகும். ஜீச‌சின் தாயார், ம‌ர்ய‌ம் என‌ப்ப‌டும் மேரி இத்த‌கைய‌ ஆடைக‌ளையே அணிந்தார் என்பதை முஸ்லிம் பெண்களின் ஆடையை விமர் சிப்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என உலமா கட்சியின் தலைவரும் சிரேஷ்ட உமலாவில் ஒரு வருமான மெளலவி முபாறக் அப்துல் மஜீட் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு இது விடயமாக அவர் இன்று (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் பெண்க‌ளின் ஆடை ப‌ற்றி முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஏன்தான் இத்த‌னை க‌வ‌லை என‌ தெரிய‌வில்லை.எழுத்தாள‌ர் வ‌. ஐ. ச‌. ஜெய‌பால‌ன் என்ப‌வ‌ர் இது ப‌ற்றி எழுதும் போது, 1980க்கு முன் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் சாரி, முக்காடு என்றிருந்தார்க‌ள், இப்போது ஏன் அபாயா என்ற‌ அரேபிய‌ ஆடையை அணிய‌ வேண்டும் என‌ கேட்கிறார்.
முத‌லில் க‌றுப்பு நிற‌ அபாயா என்ப‌து அர‌புப்பெண்க‌ளின் க‌லாசார‌ ஆடைய‌ல்ல‌ என்ப‌தை புரிந்து கொள்ள‌ வேண்டும். அந்த‌ ஆடை முஹ‌ம்ம‌து ந‌பிக்கு முன்பே உல‌கில் வாழ்ந்த‌ உத்த‌ம‌ பெண்க‌ளின் ஆடையாகும். ஜீச‌சின் தாயார், ம‌ர்ய‌ம் என‌ப்ப‌டும் மேரி இத்த‌கைய‌ ஆடைக‌ளையே அணிந்தார்.

ஒரு ச‌மூக‌த்தின் க‌லாசார‌ ஆடை என்ப‌து எப்போதும் ஒரே மாதிரியாக‌ இருப்ப‌தில்லை. ஒரு கால‌த்தில் இல‌ங்கையின் த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ளின் ஆடையாக‌ சாரியே இருந்த‌து. பின்ன‌ர் அது குட்டை க‌வுனாக‌ மாறிய‌து. இப்போது கிழ‌விக‌ளை த‌விர‌ பொது வெளியில் சாரி அணியும் த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ளை காண்ப‌து அரிது. அனைவ‌ருமே ஐரோப்பிய‌ உடையையே அணிகின்ற‌ன‌ர். ஏன் இத்த‌கைய‌ ஐரோப்பிய‌ மோக‌ம் த‌ம் பெண்க‌ளுக்கு வ‌ந்த‌து என்ற‌ கேள்வியை ஜெய‌பால‌ன் போன்றோர் த‌ம் ச‌மூக‌த்தில் கேட்க‌ வேண்டும்.
ஒரு கால‌த்தில் முழ‌ங்காலுக்கு கீழ் உள்ள‌தையும் ம‌றைத்த‌ த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ள் இப்போது தொடைக‌ளையும் காட்டித்திரிவ‌து க‌லாசார‌மாகிவிட்ட‌து. இன்னும் கொஞ்ச‌ கால‌ம் போனால் வெள்ளைக்காரி போல் ஜ‌ட்டியுட‌னும் பிராவுட‌னும் வீதியில் உலா வ‌ரும் நிலையும் வ‌ரும் என்ப‌தை எவ‌ரும் ம‌றுக்க‌ முடியாது.
இவ்வாறான‌ க‌லாசார‌ சூழ் நிலையில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஆடைக்க‌லாசார‌ம் அப்ப‌டியே இன்ன‌மும் பேண‌ப்ப‌டுகிற‌து.
பொதுவாக‌ ஒரு க‌லாசார‌ சூழ‌லில் வாழும்போது அக்க‌லாச‌ர‌த்தின் அசிங்க‌ங்க‌ள் அசிங்க‌மாக‌ தெரியாது.
உதார‌ண‌மாக‌ ஒரு வீட்டில் த‌ன் தாய் தொடைய‌ காட்டிக்கொண்டு ஆடை அணியும் க‌லாசார‌ம் இருந்தால் அவ‌ள‌து ம‌க‌னுக்கு அது அசிங்க‌மாக‌ தெரியாது.அவ‌ள‌து ம‌க‌ள் தாயை விட‌ அதிக‌மாய் தொடையை காட்டிக்கொண்டு செல்வாள். அவ‌ளுட‌ன் செல்லும் அவ‌ள் த‌ம‌ய‌ன் கூட‌ கூச்ச‌மில்லாம‌ல் செல்வான்.
80க‌ளுக்கு முன் சாரி கலாசார‌ம் இருந்த‌து. அத‌ன் பின் அந்த‌ உடையும் இஸ்லாத்துக்கு முர‌ணான‌ உடை என்ப‌தை முஸ்லிம் ச‌மூக‌ புரியத்தொட‌ங்கிய‌து. சாரி அணியும் போது மார்புக்கும் இடுப்புக்கும் இடைப்ப‌ட்ட‌ பெரும் ப‌குதி ம‌றைக்க‌ப்ப‌டுவ‌தில்லை. அது ம‌ட்டும‌ல்லாம‌ல் கால‌நேர‌ வேக‌ம் கார‌ண‌மாக‌ தொழிலுக்கு, வெளியே செல்ல‌ முய‌லும் பெண் ஆறு முழ‌ சேலையை சுற்றிக்கொண்டிருக்க‌ முடியாது. இத‌ன் கார‌ண‌மாக‌ சாரியை விட‌ ஒழுக்க‌மான‌ அபாயாவை முஸ்லிம் பெண்க‌ள் அணிகிறார்க‌ள். இந்த‌ ஆடையை அர‌பு நாட்டு ஆடையாக‌ பார்க்காம‌ல் ந‌ல்ல‌ பெண்க‌ளின் ஒழுக்க‌ ஆடையாக‌ பார்க்க‌ வேண்டும்.
அர‌பு நாட்டு ஆடையாக‌ இருந்தால்த்தான் என்ன‌? ஐரோப்பிய‌, இந்திய‌ பெண்க‌ளின் அசிங்க‌ ஆடைக‌ளை விட‌ அர‌பு நாட்டு ஆடை சிற‌ந்த‌து என்ப‌தை ஏன் நாம் ஜீரணிக்க‌ ம‌றுக்கிறோம்.?
ஆக‌வே முஸ்லிம் பெண்க‌ளின் ஆடை ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் காம‌த்துக்கு இட‌ம் வைக்காத‌தால் அது ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் காம‌த்தை தூண்டும் வித‌மாக‌ ஆடை அணியும் த‌ம‌து ச‌மூக‌ பெண்க‌ளுக்கு புத்திம‌தி சொல்ல‌ ஜெய‌பால‌ன் போன்றோர் முன் வ‌ர‌ வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -