சீனி படுத்தும் பாடு!!!


அ........ஆ.......... 
அய்யோ........அய்யய்யோ........ 
அம்மா........என்ட அல்லாஹ்வே! 
அலறலுடன் கூடிய முனகல் 
அழுகையுடன் கூடிய ஆர்ப்பாட்டம் 


அஷ்ரப் ஆஸ்பத்திரியில் 
எட்டாம் வாட்டில் 
ஏழாம் கட்டிலில் 
காதர் முகைதீனின் கதறலும் கண்ணீரும்........ 



துண்டாடப்பட்ட கால்கள் 
வட்டை போடப்பட்டு சலம் எடுப்பு 
சட்டைப் பொத்தானை போடாத 
ச....ரி....க....ம....ப....த....நி.... தாளம் போடும் கைகள் 



கண்ணுக்குள் பூகம்பம் 
பார்வையிலோ நுவரேலிய பனிமூட்டம்........ 
மூச்சு முட்டுது வாயால காற்று எடுக்குது 
நெஞ்சு அடைக்குது 
தலை உலக உருண்டையானது - 



உருளுது உப்பில்லை........ 
உறப்பில்லை........ 
இறைச்சிக்கு அத்தம் 
சின்னமீன் ஆனம் 
சிவப்பரிசி சாதம் 
தினம்........ தினம்........ 



காதர் முகைதீனின் 'கிட்னி' 
வடிக்குதில்லையாம்
வயிறும் காலும்
நிறைமாத கர்ப்பிணியாய்தோனுதாம் 



மூச்சு பொருக்குதாம் 
மூத்திரம் அடைக்குதாம்
ஊத்த படாத மனுஷன் 
வெள்ள உடுத்த புருஷன் 



காலில செருப்பு தங்காம 
கையில நெருப்பு 
சுட்டும் நோகாம 
உசிர கையில புடிச்சுக்கிட்டு 
உட்கார்ந்திருக்காரு........ 



வந்த சரிபுதீன் டாக்டர், 
'வார்த்தைக்கு முன்னூறு தடவ 
சொன்னேனே காக்கா 
வாயயும் வயிற்றையும் கட்டுங்கன்டு
கண்டதையெல்லாம் 
திண்டுட்டு முடர் 



முடரா இந்த சோடாவ 
குடிச்சிட்டு பேக்கரியும்...... 
பேக்கரும்...... வன்னும்...... 
என்டு திண்டுட்டு 
உங்கட கண்ணையும்,
கிட்னியையும், 



காலையும் 
இழந்தீட்டிங்களே காக்கா' 
என்டாரு கட்டில சுத்தி 
கட்டின பொண்டாட்டியும் 
பிள்ளை குட்டியும் 



பேத்தியும் பேரனும் ஒப்பாரியுடன்...... 
இந்த மனுஷனை பாக்கயில 
இரண்டு கண்களும் குளமாகுது........ 



பாழாய் படுத்தும் சீனி வருத்தத்தை, 
அளவான ஆரோக்கிய சாப்பாடு, 
அரைமணி அப்பியாசம், 
அமைதியான ஆனந்தம், 



மனதுக்கு தியானம் எனும் 
பழக்கங்கள் கொண்டு விரட்டிடுவோம்....... 
வாரீர் தோழா........ 
வளமான வாழ்வு 
வாழ்ந்திடுவோம்...... 



ஆக்கம் எம்.சி.எம். கமருர் ரிழா

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -