கல்குடா தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி பிரதி அமைச்சராக இருக்கிறார்.
ஆனாலும் கடந்த காலங்களில் இந்த கட்சிக்கு இந்த பிரதேசத்தில் இருந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து செல்கிறது.
இதற்கு காரணம் பிரதி அமைச்சரின் மக்கள் தொடர்பாடலில் உள்ள குறையாக இருந்தாலும் மறு பக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சி அமைப்பாளராக கணக்கறிஞரும்,சமூக ஆர்வலருமான பிரபலமான கம்பனி ஒன்றின் திறமையான நிருவாகியான றியாழ் என்பவரை நியமித்ததை பிரதான காரணமாக கூறலாம்.
இந் நியமனத்தின் பின்னரான அமைப்பாளர் றியாழின் செயற்பாடு மக்களை கவர்ந்தது இதனால் முஸ்லிம் காங்கிரஸ் இந்த பிரதேசத்தில் இழந்திருந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொண்டது.
இவ்வாறான நிலமையில் இவ் விடயங்களை கருத்தில் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ,அமைச்சர் றிசாட் பதூவூதீனும், அதன் தவிசாளர்,பிரதி அமைச்சர் அமீர் அலி றியாழை தங்களின் கட்சிக்குள் உள்வாங்குவதால் பெரும் நன்மை அடையலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு பட்ட முயற்சிகளை கடந்த பொதுத் தேர்தலின் பிற்பாடு தொடங்கி இது வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ் முயற்சி தற்போது விரைவு படுத்தப்பட்டிருக்கிறது, எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் தனது கட்சி சார்பாக வேட்பாளராக களம் இறக்கி வெற்றி பெற செய்து மாகாண அமைச்சு ஒன்றையும் பெற்றுத் தர தயாராக இருப்பதாக அமைச்சர் றிசாட் எண்ணம் கொண்டிருப்பதாக, அமைச்சரின் நெருங்கிய வட்டங்கள் உறுதியாக தெரிவித்தன.
இந்த உடன்பாட்டில் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும் உடன்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறேது.
ஆனால் இவர்களின் இவ்வாறான பல தூதுகளுக்கு இன்னும் அமைப்பாளர் றியாழ் அவர்கள் எதுவித சமிஞ்சைகளும் காட்டவில்லை என்பதுடன் தூதுவர்கள் சந்திப்பதையும், அமைச்சரின் சந்திப்புக்கான அழைப்பையும் தவிர்ந்து வருகிறார் என அமைச்சரின் நெருங்கிய வட்டம் ஆதங்கப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் றியாழ் அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார் கல்குடா தொகுதியை பொருத்தளவில் முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொருத்தராக அடையாளம் காட்டிக் கொண்டுதான் போகிறது, அவர் மக்கள் செல்வாக்கு பெற்று வரும் போது இன்னும் சிலரை வைத்து ஓரம் கட்டும் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்ற குற்றச் சாட்டும் இருக்கிறேது.
றியாழ் அவர்களை ஒரம் கட்டும் செயற்பாடுகள் அண்மையில் அமைப்பாளர் றியாழ் அவர்களுக்கு எதிராக றியாழ் அவர்களின் முழு மூச்சுடனான செயற்பாடுகளால் வெற்றி பெற்ற சில பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டு முன்னெடுக்கப்படுவதாகவும், அவர்கள் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் புதிய அமைப்பாளரை கோரியுள்ளதாகவும், மாகாண சபைக்கு புதியவர் ஒருவரை போட்டுத் தருமாறும் கோரியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அந்த உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய அமைப்பாளரை தெரிவு செய்து தரும்படி ரவூப் ஹக்கீம் அவர்கள் பணித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அண்மையில் கல்குடாவிற்கு வருகை தந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அமைப்பாளருக்கு எதிராக செயற்படும் பிரதேச சபை உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று அமைப்பாளரை புறக்கணித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியிடப்படும் இவ்வாறான நிலையில்....
றியாழ் அவர்களின் முடிவு எவ்வாறு அமையும்??? அமைச்சர் றிசாட் அவர்களின் வலையில் விழுவாரா?? அல்லது தனது கட்சி தன்னை புறக்கணித்தாலும் பொறுமையுடன் தான் இருக்கும் கட்சியில் தனது பயணத்தை தொடர்வாரா???