மீராவோடையில் இயங்கி வரும் வாராந்த சந்தையை நாங்கள் யாருக்கும் போட்டியாக ஆரம்பிக்கவில்லை - கே.பீ.எஸ்.ஹமீட்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மிகவும் சிறப்பான முறையில் இயங்கிவரும் வாராந்த சந்தையினை நாங்கள் யாருக்கும் போட்டியாக நடாத்தவில்லை என மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவரும் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் பொதுச் சந்தையொன்று தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்று வந்தது இதனால் அப்பிரதேசத்திலுள்ள மக்களும் குறிப்பாக அயல் கிராமங்களிலுள்ள தமிழ் மக்களும் பெரிதும் நன்மையடைந்தனர்.
அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இச் சந்தை இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சுமுகமான சூழ்நிலை காணப்படுவதாலும், மக்கள் பலரும் இச் சந்தையினை ஆரம்பிக்குமாரும் தொடர்ச்சியாக வேண்டிக் கொண்டதிற்கிணங்க இவ் வாராந்த சந்தையினை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினர் பொது மக்களின் நலன் கருதி ஆரம்பித்துள்ளனர்.
இவ் வாராந்த சந்தை நடைபெறுவதனால் அப் பகுதிகளில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களை வைத்திருப்பவர்களுக்கும் ஏனைய வியாபாரிகளுக்கும் நாங்கள் இதனை போட்டியாக நடாத்தவில்லை. எனவே நாங்கள் பொதுமக்களின் நலன் கருதியே இச் சந்தையினை ஆரம்பித்துள்ளோம் என்று பள்ளிவாயல் தலைவர் கே.பீ.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -