காத்தான்குடியின் இன்னொரு பக்கம்.. "அபிவிருத்தியின் கண்ணில் இதுவரை படாத காத்தான்குடி கடற்கரை வீதி"..

எம்.பஹ்த் ஜுனைட்-
கடந்த காலத்தில் காத்தான்குடி கடற்கரை ஓரத்தில் உள்ள Marine Drive கடற்கரை வீதி குன்றும்,குழியுமாக பயணிப்பதற்கு ஆபத்தான வீதியாக காணப்பட்டது.
இதனை கவனத்தில் கொண்ட தற்போதைய பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் வீதியின் ஒரு பகுதி Marine Drive கடற்கரை வீதியில் அதாவது கடற்கரை நுழைவு இடது பக்கத்தில் இல் இருந்து ஏத்துக்கால் காத்தான்குடி கடற்கரை முடிவு வரை காபட் வீதியாக அமைத்து 28/6/2017 அன்று மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது..

அதே போல் முன்னால் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களின் முயற்சியில் கடற்கரை நுழைவாயிலின் வலது பக்கம் இருந்து துவங்கப்பட்ட காங்கிறீட்டு வீதி Marine Drive கடற்கரை வீதி அன்வர் கடற்கரை பகுதிவரை போடப்பட்டு 5/3/2017 அன்று மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டது..

இவ்விரு அபிவிருத்தியை போட்டி போட்டுக்கொண்டு மேற்கொண்ட அரசியல் வாதிகள் நதீயா கடற்கரை பகுதியில் உள்ள வீதியின் பக்கம் திரும்பிப்பார்கவே இல்லை போலும்..

காத்தான்குடியின் அயல் கிராமங்களான கர்பலா,பலமுனை போன்ற கிராமங்களில் இருக்கும் பொதுமக்கள் வைத்திய தேவைக்காக காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு வந்து போகும் பிரதான பாதையாகவும் , காத்தான்குடி நகரசபையின் மடுவத்திற்கு செல்லும் பாதையாகவும் காணப்படும் இவ் வீதியானது குன்றும், குழியுமாக பயணிப்பதற்கு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதுடன் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பயங்கரமான பகுதியாகவும் காணப்படுகிறது.

இவ்வாறாக அபிவிருத்தி கட்டாயம் செய்யப்பட வேண்டிய வீதி கண்டுகொள்ளப்படவில்லை.

ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்ட marine Drive கடற்கரை வீதி இரு பக்க வீதிகளும் அகலம் மாறுபடுவதால் இரு வீதிகளும் இணைக்கும் இடத்தில் சிறு குழிகள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு இல்லாததால் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் நிகழ்வு தினமும் இடம்பெறுகிறது..

எனவே இவ்வீதிகளின் அபிவிருத்திகள் தொடர்பில் இதுவரை பல தடவைகள் சுட்டிக்காட்டியும் எந்த அபிவிருத்தியும் இடம்பெறுவதாக இல்லை.
எனவே இனிமேலாவது மக்களின் நலனை கவனத்திற்கொண்டு உரிய அதிகாரிகள், அரசியல் வாதிகள் கவணத்தில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -