100 நாட்களில் 200 வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க
இன்றைய தினம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய பைசல் நகர் ஸம் ஸம் வீதி பாடசாலை மாணவர்கள் நலன் கருதி புதிய வீதியாக உருவாக்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவம் இன்று(16) இடம்பெற்றது.
மணல் வீதியாக காணப்பட்ட இவ் வீதி 10 இலட்சம் ரூபா செலவில் கிரவல் இட்டு செப்பணிடப்படவுள்ளது.
இவ்வீதி திறப்பு விழாவின் ஆரம்ப நிகழ்வின் கதாநாயகனாக மாவட்ட அபிவிருத்திக் குழு இனைத்தலைவரும் மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மகரூப் அவர்களால் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பொதுமக்கள் உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.