ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் 03வது பொது பட்டமளிப்பு விழா, 25 வருட பூர்த்தி வெள்ளி விழா, அபிவிருத்திப் பெரு விழா உள்ளிட்ட முப்பெரு விழா நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (16) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஆசிரிய ஆலோசகரும் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவருமான ஏ.எல்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று பெண்களின் ஈடுபாடு எல்லாத் துறைகளிலும் அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் சரியான இலக்கை அடையாளப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு உலமாக்களுக்கு இருக்கிறது. இதற்கான தீர்வை மிக விரைவில் பெற்றுக் கொடுக்காதபோது, அது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
மேற்கத்தேய உலகு, இந்நாட்டிலுள்ள சில இனவாத சக்திகளை பயன்படுத்தி இந்த சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு முஸ்லிம் தனியார் சட்டம் போன்ற விடயங்களை எந்தநாளும் வாய்க்கு அவலாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நாம் ஓர் அர்த்தமற்ற ஆணாதிக்க சமூகம், ஒரு பிடிவாத சமூகம் என்று எங்கள் மீது பழி கூறுகின்ற ஒரு நிலைவரம் மிக ஆபத்தாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் இவற்றுக்கான தீர்வுகளை நாம் விரைவாக காண வேண்டும். இதற்காக அரசியல் தலைமைகளும் உலமாக்களும் இவற்றிலே கருத்துப் பரிமாற்றங்களை தர்க்கித்து முடிவு காண முன்வர வேண்டும். எவ்வளவு தூரம் இதிலே நெகிழ்வுத் தன்மையுடன் ஷரீஆ வரம்பை மீறாத வகையில் செய்றபட முடியுமோ அவ்வளவுக்கு செயற்பட்டு முஸ்லிம் தனியார் சட்ட விவகாரங்களை கையாள திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
நமது நாட்டிலே, இஸ்லாமிய சமூகத்திற்குள்ளே பல்வேறு சிந்தனை வட்டங்கள் இருக்கின்றன. அதற்காக ஒரு சிந்தனை வட்டம் மற்றைய சிந்தனை வட்டத்தைவிட மேம்பட்டதல்ல, ஒரு சிந்தனை வட்டம் மற்றைய சிந்தனை வட்டத்தைவிட முரண்பட்டது என்றும் சொல்ல முடியாது. சிலவேளைகளிலே மத்ஹப்களை ஷரீஆவாகப் பார்க்கின்ற நிலைமை மேலோங்குவதால் சில பிரச்சினைகள் தலை தூக்குககின்றன. அர்த்தமில்லாமல் சிலர் ஊடுருவல்களாக காட்ட முனைகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் நிதானமாகவும் பக்குவமாகவும் விரைவாகவும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க உலமாக்கள் முன்வர வேண்டும்.
அரசியலக்குப் பெண்கள் வருவது எவ்வாறு என்பது தொடர்பாக வழிகாட்டுதல் அவசியம். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதமான பெண்களின் பிரதிநிதித்துவம் உள்வாங்கபட வேண்டுமென சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்நிர்ப்பந்த நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் தமது சமய ஒழுக்க விழுமியங்களுடன் சகல துறைகளிலும், செயற்படுகின்றார்கள். மேற்கத்திய உலகம் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு கங்கணம் கட்டி செயற்படுகின்றது. இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் விழிப்பாக இருக்க வேண்டும். பல்லின சமூகத்துடன் இணைந்து வாழும் நாம் சில செயற்பாடுகளில் நெகிழ்வுத் தன்மையுடன் தூர நோக்குடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது இலக்கை அடைய முடியும்.
பெண்கள் இன்று உயர் கல்வித் துறை, சட்டத் துறை, மருத்துவத் துறை போன்றவற்றில்; ஈடுபட்டு ஆளுமையுடன் செயற்படுகின்றார்கள்.
முஸ்லிம் பெண்களின் மேற்படிப்பு கல்வி நிறுவனமாக இலங்கையின் நாலா பாகங்களுக்கும் கலங்கரை விளக்கமாக காணப்டுகின்ற, ஒரு முன்னுதாரண கல்விக்கூடமாக திழ்கின்ற ஒலுவில் மகளிர் அறபுக் கல்லூரியை அபிவிருத்தி செய்வதற்கு என்னாலான ஒத்துழைப்புகளை வழங்குவேன்.
ஒரு கிராமத்தின் வளர்ச்சியும், சமூகத்தின் வளர்ச்சியும் அக்கிராமத்தில் உருவாகின்ற கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளது. முஸ்லிம் சமூகம் நமது நாட்டில் பல கல்வியாளர்களை உருவாக்கி அதன் மூலம் நாட்டிற்கும், சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பினை வழங்கி வருகின்றது.
சமூகத் தலைவர்கள் தமது ஆளுமையை வளர்த்து சமூகத்தை வழிநடாத்தும் அறிவாற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும். இதன் மூலம் சமூகம் வளரும்' என்றார்.
இவ்விழாவில் 38 ஆலிமாக்களுக்கு 'ஸஹ்விய்யா' மௌலவியாப் பட்டங்கள் வழங்க்பட்டதுடன் இக்கல்லூரிக்காக சேவையாற்றியவர்கள் பாராட்டப்பட்டதுடன், கல்லூhயிpல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் புதிய கட்டடங்களுக்கான நிர்மாணப் பணிகளும் அங்குரார்ப்பணம் செய்த வைக்கப்பட்டன.
இவ்விழாவில் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரதிநிதிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர்.