சட்டமுதுமானியாகிறார் கல்முனையின் இளம் சட்டத்தரணி முஹைமின் காலித்.


நிப்றாஸ் மன்சூர்-
கல்முனையின் இளம் சட்டத்தரணி முஹைமின் காலித் கடந்த வியாழக்கிழமை வெளியான கொழும்பு பல்கலைக்கழக சட்டமுதுமானிப்பரீட்சை பெறுபேறுகளின்படி சித்தியடைந்துள்ளார். இவர் கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமாவார் என்பதுடன் பல்வேறு பொதுநல வழக்குகளிலும் முன்னின்று செயற்பட்டு வருபவருமாவார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது சட்ட இளமானிப்பட்டத்தை பெற்ற சட்டத்தரணி முஹைமின் காலித் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் பெற்ற பின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக தெரிவாகி வட கிழக்கிலுள்ள மேல் நீதிமன்றங்களில் சட்டமா அதிபர் சார்பாக பல்வேறு வழக்குகளை வெற்றிகரமாக வாதிட்டுள்ளார்.

2015ம் ஆண்டில் பண்டாறநாயக்க சர்வதேச கற்கைகள் நிறுவகத்தில் “சர்வதேச உறவுகள” (International Relations) பட்டப்பின் டிப்ளோமா கற்கையையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். இவர் தனது சட்ட முதுமானிக்கான கற்கையில் பொது நிர்வாகச்சட்டம், தொழிளாளர் சட்டம் மற்றும் தகவல் தொழிநுட்ப சட்டம் என்பவற்றில் நிபுனத்துவம் பெற்றுள்ளதோடு இத்தொழிநுட்ப உலகில் மிக அவசியமாக உணரப்படும் சைபர் க்ரைம் (computer crimes) சட்டத்தில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளமையூம் குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி முஹைமின் காலித் “குரல்கள் இயக்கத்தின்” பிரதான செயற்பாட்டாளர்களுள் ஒருவர் என்பதுடன் RTI now அமைப்பின் ஸ்தாபக உருப்பினருமாவார். கல்முனையின் சட்டத்துறை வரலாற்றில் மிக இளம் வயதில் சட்டமுதுமானிக்கற்கையை நிறைவு செய்துள்ள இவருக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு பல்களைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழாவுடன் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -