திருகோணமலையின் புராதன இடமான கன்னியா வெந்நீருற்ற பராமரிப்பை மீழவும் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் பொறுப்பில் வழங்க வேண்டும் என பிரதேச சபையின் தலைவர் டாக்கடர் ஜி.ஞானகுணாளன் கோரிக்கைவிடுத்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குளுக்கூட்டத்தில் இக்கோரிக்கையை அவர் முன்மொழிந்தார்.
முன்னர் பிரதேச சபையின் பொறுப்பில் இருந்த இந்த புனித இடம் தற்சமயம் தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டு கையாளப்பட்டு வருகின்றது. அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இவ்விடத்தில் காணப்படும் 7 வடிவத்திலான
சுடுநிர் கிணறுகள் முறையாக சுத்தம் செய்யப்படாத நிலை காணப்டுகின்றது. பொது மலசலகூடங்கள் நிறைந்து வழியும் நிலமை காணப்படுகின்றது.
எனவே முன்னரைப்போன்று கன்னியா வெந்நீருற்றினையும் மீழவும் பிரதேச சபையிடம் வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் கடந்த 2007இல் இந்த நிருவாகத்தை தொல்பொருள் திணைக்களம் தனதாக்கியது அங்கு பொதுமக்களிடமும் நிதியையும் அறவிடுகிறது.
அதன்வருமானமும் பிரதேச சபைக்கு வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே பிரசித்தி பெற்ற மாபிள் பீச்கடற்கரை நிருவாகமும் இன்னும் விமானப்படையின் பொறுப்பில் உள்ளது.
அது பொது மக்கள் சென்று வரும் பொது இடமாக விருப்பதனால் அதனையும் பிரதேச சபையின் பராமரிப்பில் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டினார். அதற்கான கட்டணங்களையும் பொதுமக்களிடம் அவ்வர்கள் அறவிடுகின்றார். என்பது ம் நோக்கத்தக்கது.