புலிகள் முஸ்லீம்களை விரட்டியதற்கு வக்காளத்து வாங்கிய மாகாண சபை உறுப்பினர்

முஸ்லிம்கள் விசுவாசத்திற்கு மாறாக அன்றைய காலத்தில் காணப்பட்டதனால் விடுதலைப்புலிகள் அவர்களை வெளியேற்றியதாக மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்.
நேற்று(31) நடைபெற்று முடிந்த 130 ஆவது மாகாண சபை அமர்வில் குறித்த மாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளதாவது
மக்களாட்சி தத்துவத்துக்கு மாறாக இருந்தால் விடுதலை புலிகள் போன்று நாம் செயற்பட வேண்டும்.மக்களிற்கு விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பத்தில் முக்கிய முடிவுகளை நாம் எடுக்கவேண்டும்.அவ்வாறே தான் கடந்த காலங்களில் புலிகளும் மாத்தையா கருணா போன்றோருக்கு எதிராக மேற்கொண்டனர்.
இதே போன்று தான் அன்றைய காலத்திலும் புலிகளின் தலைமையினால் வட பகுதி முஸ்லீம்கள் ஒரு சிலரினால் இவ்வாறான வெளியேற்ற முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும்.இது சரியாக இருப்பதாகவே தற்போது தோன்றியுள்ளது.

மேற்படி செய்தியை யாழில் வெளியாகும் பிரதான பத்திரிகை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்கின்ற ஒரு பாரிய மனித உரிமை மீறலை முஸ்லிம் பிரதிநிதியாகிய இவர் அவ்விடயம் குற்றமற்றதாகக் காட்டுவதற்கு முயன்றுள்ளார். அத்தோடு முஸ்லிம் மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு கருத்தை இவர் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றார் என யாழ் முஸ்லீம் மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இவரது அரசியல் போக்கு தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தும் என கூறி வாய்க்குவந்தபடியெல்லாம் பேசி வருகின்றார் எனவும் குறிப்பிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த மாகாண சபை உறுப்பினரும் மௌனமாகவே இருந்து வருகின்றார்.அத்துடன் இம்மாதம் இறுதிப்பகுதியில் மாகாண சபையின் ஆட்சிக்காலமும் நிறைவுக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -