விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை விரைவாக வழங்க கோரி கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு



ரச பாடசாலைகளில் விளையாட்டு துறையினை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் கல்வியமைச்சானது
அரசபாடசாலைகளில் காணப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 3850 வெற்றிடங்களை நிபர்த்தி செய்ய நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டங்களில் விளையாட்டுத் துறையில் தேசிய,மாகாண மட்டங்களில் சாதனை புரிந்தவர்களிடம் விண்ணப்பம் கோரி தகமை அடிப்படையில் 3850 பேரை தெரிவு செய்திருந்தது.
கல்வி அமைச்சு கோரிய தகமை அடிப்படையில் கல்வியமைச்சினால் தெரிவு செய்யப்பட்டோர் கடந்த வருடம் நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டனர்.நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகமையுடைய விண்ணப்பதாரிகள் உடற்தகமை தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.கடந்த வருடம்(2017) ல் உடற்தகமை தேர்வு இடம்பெற்றிருந்தாலும் இவ்வருடம்(2018) ஜுன் மாதமளவில் நியமத்துக்கான பெயர்பட்டியலை கல்வியமைச்சு மாகணங்களுக்கு அனுப்பி இருந்தது.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனமானது ஜூன் மாதம் 25 ம் திகதி வழங்குவதற்காக கல்வியமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் சில மாகாணங்கள் இழுபறியினால் அந் நியமனம் கொடுபடாமல் இன்றுவரை எந்த தீர்மானமும் இன்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நியமனத் தாமதத்தால் 3850 இளைஞர்,யுவதிகள் தங்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர்.ஏற்கனவே செய்த தொழில்களை விட்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்துக்காக காத்திருக்கின்றனர்.2 மாதங்களை கடந்தும் நியமனம் குறித்தான பல செய்திகள் வெளியாகி உள்ளன.குறித்த நியமனம் அரசினால் இரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த நியமனத்தை விரைவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று(2018/09/05)கவனயீர்ப்பும்,கிழக்கு மாகாண ஆளுனரிடம் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோர் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்துக்கு முன் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்த்தனவிடம் மகஜர் கையளிக்கப்பட்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோரின் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டுமென கல்வியமைச்சரிடம் பணிப்புரை விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -