அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம தமிழ்மக்களது காணிமீட்புப் போராட்டம் இன்று (17) திங்கட்கிழமை 35வது நாளாகத் தொடர்கிறது.
தாம் பூர்வீகமாக வாழ்ந்துவந்த நிலத்தைக் கோரி இவர்கள் கடந்த 35தினங்களாக வீதியோரத்தில் முகாமிட்டு வெயிலிலும் பனியிலும் இரவுபகலாக மனவைராக்கியத்துடன் போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர்.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளை அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் இன்று 35வது நாளாகத் தொடர்கிறது.
எனினும் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாறைக்கச்சேரியில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இறுதிநேரத்தில் நிகழ்ச்சிநிரலில் இல்லாமல் கனகர்கிராம விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொத்துவில் கனகர்கிராம தமிழ்மக்களுக்காக சிங்களஅரசியல்பிரமுகர் சந்திரதாசகலப்பதி முன்மொழிய அதனை முஸ்லிம்அரசியல்பிரமுகர் உதுமாலெவ்வை வழிமொழிந்து உரக்கக்குரல்கொடுத்தமை கண்கொள்ளாக்காட்சியாகவிருந்தது. இனஜக்கியம் இவ்வாறுதான் கட்டியெழுப்படவேண்டும் என்பதற்கு நல்லஉதாரணமாக இவ்விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம்.
அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின்படி பொத்துவில் கனகர்கிராம போராட்டம் இவ்வாரம் நிறைவடையக்கூடிய சாத்தியம் நிலவுவதாகக் கொள்ளலாம்.
அப்படி அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அறியவிரும்புவீர்கள். இதோ விபரம்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்கஅதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க முன்னிலையில் நடைபெற்றபோது இணைத்தலைவரான கிழக்குமாகாணசபையின் முன்னாள் தவிசாளர் சந்திரதாச கலப்பதி பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ் மக்களின் போராட்டம் பற்றியும் அவர்களது காணி விடுவிக்கப்படவேண்டும் என்றும் பிரஸ்தாபித்து உரையாற்றினார்.
அன்றைய கூட்ட நிகழ்ச்சிநிரலின்படி அனைத்தும் நடைபெற்று முடிந்து நன்றியுரைகூறஇருந்தவேளையில் இணைத்தலைவர் சந்திரதாச கலப்பதி அங்கு திடீரென பிரஸ்தாபிக்கையில்:

கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக பொத்துவில் கனகர் கிராம தமிழ்மக்கள் தாம் வாழந்த காணியைப்பெறுவதற்காகப் போராடிவருகின்றார்கள். அவர்கள் அந்த இடத்தில் வாழ்ந்துவந்ததை நான் நன்கு அறிவேன். யுத்தசூழ்நிலை காரணமாக அவர்கள் இடம்பெயரநேரிட்டது. அதனால் அப்பகுதி இன்று காடுமண்டிக்கிடக்கிறது. எனினும் இன்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகள் மலசலகூடங்கள் உடைந்துதகர்ந்து கிடப்பதைக்காணலாம். இதைவிட என்ன ஆதாரங்கள் வேண்டும்? அவர்களது காணிகளை ஏன்விடுவிக்கமுடியாது? விடுவிக்காமைக்கான காரணம் என்ன? என்று கேள்வியெழுப்பினார்.
அதற்குப்பொறுப்பான வனவள அம்பாறை மாவட்ட அதிகாரி முனசிங்க பதிலளிக்கையில்:
நாம் அதுதொடர்பான எமது அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து பதில்வந்ததும் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார்.
இடைமறித்து க.கோடீஸ்வரன் எம்.பி. தான் இதுதொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியுள்ளதாகவும் அவரிடமிருந்த பதில் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இணைத்தலைவர் உதுமாலெவ்வை கூறுகையில்:
அந்த இடத்தில் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததை நான் அறிவேன். அதற்கு நானும் சாட்சி. இங்கு சிங்;களமக்கள் சார்பில் கலப்பதியும் முஸ்லிம்மக்கள் சார்பில் நானும் சாட்சி பகர்கின்றோம். அதைவிட இந்த டிசிசி தீர்மானமும் உள்ளது. இதைவிட இன்னும் என்ன தேவை? எனவே அந்தக்காணியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.
உண்மையில் சபையில் முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வையின் மனிதாபிமான தார்மீகமான இனமதபேதமின்றி குரல்கொடுக்கின்ற போக்கு பாராட்டப்படக்கூடியது. இந்தவிடயத்தில் மட்டுமல்ல திருக்கோவில் ஆததாரவைத்தியசாலை அபிவிருத்தி விடயத்திலும் குரல்கொடுத்தார். தேவையானபோது நல்ல சிங்களத்திலும் மற்றநேரத்தில் தாய்மொழியாம் அழகுதமிழிலும் கம்பீரமாக துணிந்து இனமதபேதமற்றுக் குரல்கொடுப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும்.
அங்கு இடம்பெற்ற கருத்தாடலைப்பார்த்தபோது இவ்விவகாரம் இவ்வாரத்தில் முடிவுக்குகொண்டுவரப்படலாம் என நம்பிக்கை எழுகின்றது. ஏனெனில் இதுவிடயத்தில் அங்கு கலந்துரையாடிய அரசியல்பிரமுகர்களும் சரி அதிகாரிகளும் சரி மக்களுக்குச் சாதகமாகக் கருத்துக்களைப்பகிர்ந்ததைக் காணமுடிந்தது.
இதேவேளை நேற்றுமுன்தினம் 4வது தடவையாக விஜயம் செய்த காரைதீவுபிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களுக்கென மேலுமொரு தனியாக தகரக்கொட்டிலொன்றை அமைக்கஉதவியதோடு சில உதவிகளையும் செய்தார். பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபனும் ஒரு கொட்டிலை அமைத்துக்கொடுத்துள்ளார். பொத்துவில் பிரதேசசபை 24மணிநேரமும் தண்ணீர்வவுசரை நிறுத்தி குடிநீரை வழங்கிவருகிறது.
அவர் அங்கு கூறுகையில்;
நல்லாட்சியைக் கொண்டுவந்த தமிழ்மக்கள் இன்று நடுத்தெருவில் போராட்டத்திலீடுபட வேண்டிய துர்ப்பாக்கியநிலையிலுள்ளனர். அவர்களுக்கு நல்லதீர்வை வழங்கி போராட்டத்தை இந்த நல்லாட்சிஅரசு முடிவுக்குகொண்டுவரவேண்டும் என்றும்
இதேபோன்று மாற்று இனமொன்றின் மக்கள் குழாமொன்று ஒருநாள் வீதியிலிறங்கினால் ஊடகங்கள் தொடக்கம் அரசியல்வாதிகளின் பார்வை அங்கு குவிந்திருக்கும். அவசரமாக அமைச்சர்களும் பேசுவார்கள். எம்.பிக்களும் பேசுவார்கள். தீர்வு கிட்டியிருக்கும்.
ஆனால் இங்கு ஒரு மாதகாலத்திற்கும் மேலாக போராடிவருகின்றபோதிலும் இன்னும் தீர்வு கிடைக்காதது வேதனைக்குரியது. நாதியற்ற சமுகமாக தமிழ்ச்சமுகமிருப்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.என்றார்.
அங்கிருந்த மக்கள் கூறுகையில்: 'எமது போராட்டம் ஆரம்பமாகி; ஒருமாதகாலத்தைத்தாண்டியுள்ளது. இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. அதற்காக நாம் சலிக்கவில்லை. சளைக்கவில்லை.எமது அரசியல்வாதிகள் வெறும் அறிக்கைமன்னர்களாக உள்ளனரே தவிர எதையும் சாதித்தாகத்தெரியவில்லை.
எம் தமிழ்மக்களுக்காக சிங்கள் முஸ்லிம் அரசியல்சகோதரர்கள் குரல்கொடுக்கிறார்கள். நன்றிகள். அதேவேளை எமது தமிழ் அரசியல்வாதிகளும் தூங்குகின்றார்களா? என்று எண்ணத்தோன்றுகின்றது.
34நாட்களல்ல 340 நாட்கள் சென்றாலும் இந்தஇடத்திலேதான் இருப்போம். எதுவரினும் நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர நிலத்தைமீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது ' என்றனர்.
மொத்தத்தில் இத்தமிழ்மக்களது போராட்டம் வெற்றியின் விளிம்பில் நிற்பதுபோன்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.