பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் சுபையிர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது:

கிழக்கு மாகாண ஆளுநர் 

எஸ்.அஷ்ரப்கான்-
மது நாட்டிலே இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் நாட்டின் சகல பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஊடாக, பின்தங்கிய மற்றும் தனித்துவிடப்பட்ட கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட உறுகாமம் மற்றும் வடிச்சல் ஆகிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
குறித்த திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு (15) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதும், கைவிடப்பட்டதுமான பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு தான் கிழக்கு மாகாண சபை ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். ஏறாவூர் பற்று உறுகாமம், வடிச்சல் ஆகிய பிரதேசங்கள் கடந்த யுத்த காலத்தின் போது கடமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும். இவ்வாறான பிரதேசங்களில் மீளக்குடியேறிய மக்கள் இன்றும் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சமாதான சூழலில் யுத்த காலத்தின் போது பாதிக்கப்பட்ட பிரசேங்களை அபிவிருத்தி செய்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உறுகாமம், வடிச்சல் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து தருமாறு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் சுபையிர் என்னிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவரது கோரிக்கைக்கினங்க இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளேன். குறித்த நிதியின் ஊடாக இப்பிரதேசத்தின் பாதைகள், குடிநீர் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும், அத்துடன் இங்கு பொது சந்தை ஒன்றினையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

யுத்த காலத்தின் போது இந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மக்களை மீளக் குடியமர்த்தி அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்தப்பிரதேசத்தோடு அமைச்சர் சுபையிர் பின்னிப்பிணைந்திருப்பதனை என்னால் அவதானிக்க முடிகிறது.

பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு கிழக்கு மாகாணத்தில் கிராமம் கிராமமாக சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து நாம் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேதான் நான் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

நீங்கள் ஜனாதிபதியை ஆதரித்துத வெற்றிபெறச் செய்தவர்கள், அவர் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு உழைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது செங்கலடியில் இருந்து பதியத்தலாவை வரையான பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதனை அபிவிருத்தி செய்கின்ற போது செங்கலடியில் இருந்து பதியத்தலாவ, பதுளை ஊடாக நுவரெலியா மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு இலகுவாக பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என்றார்.
இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல், மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -