மு. கருணாநிதி தனது எழுத்துக்களால் தனக்கென இடம் பிடித்து அதனை அரசியலிலும் சாதித்து காட்டினார்.
ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக இருந்த போது அரசியல் சாக்கடை என சொல்லிவிட்டு கும்பலோடு கும்பலாக அவர் இருக்கவில்லை. மாறாக தனது புரட்சிக் கருத்துக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
கடவுள் பெயரால் நடக்கும் அநியாயங்களையும் சாதிக்கொடுமைகளையும் துணிச்சலுடன் சுட்டிக்காட்டினார். இப்போதெல்லாம் பல எழுத்தாளர்கள் இத்தகைய கொடுமைகளை எடுத்தெழுத அச்சப்படும் போது மதம் என்பது புனிதம் என கருதப்பட்ட அக்காலத்தில் அவரால் எழுதப்பட்டவை அபாரமானவை.
பிழையான பல கடவுட் கொள்கையையும், உயர் ஜாதிக்களின் மத அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் கண்டித்து எழுதிய அவர் கடவுளே இல்லை என சொல்லும் அளவுற்கு சமூகத்தில் இருந்த கொடுமைகளைக்கண்டு கலங்கினார்.
ஓர் இலக்கியவாதி தனது கருத்துக்களை மக்கள் மயப்படுத்தி மக்களை தன் கருத்தின்பால் ஒன்று சேர்க்க வேண்டும் என்றால் நிச்சயம் அரசியல் என்ற வழி தேவை என்பதை காட்டிய கலைஞர் மு. கருணாநிதியின் இழப்பில் உலமா கட்சியும் தனது கவலையை தெரிவித்துக்கொள்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத் தலைவர் உலமா கட்சி-