தி.மு.க தலைவரின் மறைவு பேரிழப்பாகும்-பிரதி அமைச்சர் ஹரீஸ்


அகமட் எஸ். முகைடீன்-

தி.மு.க தலைவரும் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் மறைவு பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவை முன்னிட்டு பிரதி அமைச்சர் ஹரீஸ் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தி.மு.க தலைவர் கருணாநிதி இந்திய தலைவர்களில் மிகவும் சிரேஷ்டமான பழம்பெரும் தலைவராவார். அவர் 5 தடவைகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றினார்.

குறிப்பாக 50 வருடகாலம் தி.மு.க தலைவராக இருந்து தமிழ் நாட்டில் திராவிட இயக்க அரசியலை கட்டிக்காத்த பெரும் புரட்சித் தலைவராவார். அவர்; எமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றெடுத்தார். அதுமட்டுமன்றி தமிழ் நாட்டில் வாழ்கின்ற சிறுபாண்மை முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் மக்களுடைய உரிமைகளையும் பெற்றுக்கொடுத்ததோடு சாதி ஒழிப்பு, மத நல்லினக்கம் என்பவற்றுக்காக அர்பணிப்புடன் செயற்பட்டார். இலங்கைச் சிறுபாண்மை தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட ஒரு பெருந் தலைவருமாவார்.

நான் 2002ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நானும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் மற்றும் சில கட்சி முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து தமிழ்நாடு கோபாலபுர இல்லத்தில் இவரை சந்தித்திருந்தோம். இச்சந்திப்பின்போது தற்போதைய தி.மு.க செயற்தலைவர் ஸ்டான்லினும் உடனிருந்தார். இதன்போது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் சம்பந்தமாக எங்களுடன் மனம்விட்டு மிகவும் அன்பாக பேசியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவருடனான அச்சந்திப்பு அரசியலில் அவருக்கிருந்த பெருத்த அனுபவத்தை எமக்கு உணர்த்தியது.
எமது பெரும் தலைவர் அஷ்ரபுக்கும் கருணாநிதிக்குமிடையில் பெரும் நட்பிருந்தது. தலைவர் அஷ்ரபுடைய அரசியல் வளர்ச்சிக்கு கருணாநிதி பல விதத்தில் பங்காற்றியுள்ளார். அவ்வாறு முஸ்லிம் காங்கிரசுடன் நட்பு சக்தியாக இருந்த கருணாநிதியின் இழப்பு எமக்கு பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் அன்னாரின் மறைவினால் துயருரும் திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -