கட்டாரில் மூன்று நாட்களில் நான்கு பேர் மாரடைப்பால் மரணம்


மாரடைப்பு (HEART ATTACK) ஏன் ? எப்படி? ஒரு பார்வை
************************************

Heart Attack(மாரடைப்பு) என்ற பெயரை உச்சரித்தாலே வயதெல்லையின்றி அச்சத்துடன் வாழும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு காலமிருந்தது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மாரடைப்பு அதிகம் ஏற்பட்டது. பின்னர் 50,40 என்றாகி தற்போது 30 வயதிலும் மாரடைப்பு ஏற்படுகிறது. அண்மைக்காலமாக 26,28 வயதில் மாரடைப்பு ஏற்பட்டவர்களையும் நான் சந்தித்துள்ளேன். உலகில் எந்தவொரு நாட்டிலும் இறப்பிற்குறிய முதன்மையான காரணியாக அமைவது மாரடைப்பாகும்(Heart Attack).

#Heart Attack(மாரடைப்பு) என்றால் என்ன?
••••••••••••••••••••••••••••••••••••

இதயம் சுருங்கி விரிவதன் மூலம் உடம்பிலுள்ள பல்வேறுபட்ட பகுதிகளுக்கு ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதி நாடிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதயத்திலிருந்து வெளியாகின்ற ஏறு பெருநாடியில்(Ascending Aorta) இருந்து உருவாகின்ற முடியுரு நாடிகள்(Coronary Arteries) வலது, இடது என பல கிளைகளாக பிரிந்து இதயம் சுருங்கி விரிய தேவையான ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியை வழங்குகிறது.

மேற்படி முடியுரு நாடிகளில் ஏற்படுகின்ற அடைப்புகள்/தடைகள் காரணமாக இதயத்திற்கு செல்லுகின்ற ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியின் அளவு குறைவடைவதனால் இதயத்தின் தசைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. முடியுரு நாடிகளை ஒரு குழாய் என்ற ரீதியில் கற்பனை செய்தால் இதன் உள்பகுதி(Lumen) எவ்வித தடையில்லாமல் காணப்படும். பல்வேறு செயற்பாட்டினால் மேற்படி முடியுரு நாடிகளின் உட்புற சுவர்களில் Atherosclerosis என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இதனுடைய அமைப்பு பல்வேறுபட்ட காரணங்களினால் பெரிதாகி மாற்றம் ஏற்படும் போது (Plaques with Blood clots) உட்புற சுவரின் விட்டம் குறைந்து செல்லும். இதனால் முடியுரு நாடிகளின் உட்புற சுவரின் விட்டம் குறைவடைந்து செல்வதனால் இதயத்திற்குறிய இரத்த ஓட்டம் குறையும். ஒரு நிலையில் மேற்படி Atherosclerosis உட்புற சுவரை பூரணமாக தடை செய்வதனால் இதயத்திற்குறிய இரத்த ஓட்டம் முழுவதுமாக தடைப்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

#Risk Factors for Heart Attack
••••••••••••••••••••••••••••••••••••
1) வயது(வயது கூடி செல்லும்போது மாரடைப்பு ஏற்படுவதற்குறிய நிகழ்தகவு அதிகம்)

2) பால்(ஆண்>பெண்)

3) மாரடைப்பு சம்பந்தமான குடும்ப வரலாறு (குடும்பத்தில் அதிலும் மிக நெருங்கியவர்களுக்கு 55வயதிற்கு முன் மாரடைப்பு ஏற்பட்டால் நிகழ்தகவு அதிகம்)

4) புகைத்தல்(Smoking)

5) High Pressure(Hypertension)

6) High Cholesterol(Lipid Profile இல் LDL கூடி/HDL குறைவடைகின்ற போது மாரடைப்பிற்கான நிகழ்தகவு அதிகம்)

7) நீரிழிவு நோய்(Diabetes Mellitus)

உடல் பருமன்(Obesity)-Body Mass Index(BMI) உங்கள் நிறையை உங்கள் உயரத்தினால்(Meter) வகுத்து வரும் பெறுமானத்தை மீண்டும் உயரத்தினால் வகுத்து வரும் பெறுமானம் 25ஐ விட அதிகரிக்கும் போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

9) Sedentary Life Style (அசையாமல் ஒரு இடத்திலே தொடர்ச்சியாக இருந்து கொண்டு Phone, TV, Computer பாவிப்பவர்கள்.......போன்றவை)

10) முறையான உடற்பயிற்சி இன்மை

11) முறையற்ற உணவு பழக்கம்

இவற்றைவிட தற்கால உலகில் ***மனஅழுத்தத்துடன் கூடிய வாழ்க்கையும்(Stressful Life) பிரதானமாக அமைகிறது.


#மாரடைப்பின் அறிகுறிகள்(Symptoms of Heart Attack)
••••••••••••••••••••••••••••••••••••

மாரடைப்பின் அறிகுறிகள் வயது, மாரடைப்பு ஏற்பட்ட இதயத்தின் பகுதி, நீரிழிவு போன்ற வேறு நோயுள்ளவர்கள் போன்றவற்றிற்கு அமைய வேறுபடும்.

1) நெஞ்சுவலி(Chest Pain)-ஏறத்தாழ அனேகமானவர்களுக்கு இலேசான நெஞ்சு வலியுடன் ஆரம்பிக்கும். பொதுவாக இடது நெஞ்சு பகுதி/நடு நெஞ்சில் இறுக்கி பிடிப்பது போன்ற நோவு மெதுவாக விட்டு விட்டு ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல வலி கூடுவதுடன் இந்த நோவு கழுத்து, இடது தோள்பட்டை, இடது தாடை, இடது கைகளுக்கும் பரவும். இது 20 நிமிடத்தை விட அதிகமாக இருக்கும். எந்தவித நோவு இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம் (Silence Heart Attack). இதையே இரவில் தூங்கியவர் காலையில் மரணம் அருகிலுள்ளவருக்கு கூட அறியவில்லை என்று சொல்லப்படுகின்ற சம்பவங்களாகும்.

இதை தவிர இதயத்தின் கீழ்ப்பகுதியில் ஏற்படுகின்ற மாரடைப்பு (Inferior Heart Attack) வயிற்றுப்புண்(Gastric Ulcer)அறிகுறியான நெஞ்சி எரிவு(Burning Sensation) குமட்டல் போன்ற ஒத்த அறிகுறிகளாக அமையும்.
இன்று காலை மரணமாகிய சகோதரருக்கு நெஞ்சு வலி ஏற்படவில்லை. நெஞ்சு எரிவு ஏற்பட வழமை போன்று Gastritis/Ulcer என பலர் நினைப்பது போன்று அவரும் நினைத்துள்ளார். இடது கை இலேசான வலியை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை. இதைய மனநிலையில்
தான் நாம் பலர் உள்ளோம். இவ்வாரான அறிகுறிகள் ஏற்படும் போது சூடான நீர்(Hot Water) வெள்ளை பூண்டு(Garlic) சாப்பிடுவதிலும் வைத்தியசாலைக்கு அவசரமாக செல்லவேண்டிய Golden Time வீடுகளில் கழிப்பதால் பல மரணங்கள் நிகழ்கின்றன.

வயதானவர்கள், நீண்ட கால நீரிழிவு நோயாளிகள் எவ்வித நெஞ்சு நோவு இல்லாமல் சில வேளை தலை சுற்று/மயக்கம் மட்டும் மாரடைப்பிற்குறிய அறிகுறிகளாக அமையும்.

இதை தவிர இந்நோவுடன்
-வாந்தி (Vomiting)
-குமட்டல் (Nausea)
-அதிக வியர்வை (Excessive Sweating),
-நெஞ்சி பட படவென்று அடித்தல் (Palpitation)
-மூச்சு தினறல்
-தலை சுற்று/மயக்கம்

மாரடைப்பை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?
(Diagnosis of Heart Attack)
••••••••••••••••••••••••••••••••••••

1) Clinal History

2) ECG-Electro Cardio Graph

மேற்படி அறிகுறி ஏற்பட்டு வைத்தியசாலையில் அணுமதிக்கப்படுகின்ற போது ECG மாற்றங்கள் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை உறுதி செய்யலாம். இதன்போது ECG எவ்வித மாற்றமின்றி தொடர்ச்சியாக அறிகுறிகள் இருக்கும் போது மீண்டும் மீண்டும் ECG எடுக்கப்படும். சிலருக்கு ஓய்வு நேரங்களில் எவ்வித நோவு இல்லாமலும் இயக்கத்தின் போது மட்டும் நெஞ்சு நோவு ஏற்படுவதால் ஓய்வு நிலையில் ECG எடுப்பதால் இதில் எவ்வித மாற்றத்தையும் காண முடியாது. இதன்போது Exercise ECG பரிந்துரை செய்யப்படும்.

3)Cardiac Enzymes

4)Cardiac Catheterisation/Angiography(மேற்படி இதயத்திற்கு குருதியை வழங்குகின்ற முடியுரு நாடிகளில் எங்கெல்லாம் அடைப்பு உள்ளது(block), எத்தனை வீதத்தில் அடைப்பு உள்ளது போன்றவை அறிய முடியும். இதனடிப்படையிலே மருந்து பாவிப்பதா? Or Bypass Operation என்பன தீர்மானிக்கப்படுகிறது.


Management of Heart Attack
••••••••••••••••••••••••••••••••••••

மேற்படி அறிகுறிகள் ஏற்படுமிடத்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு உடனடியாக அணுமதிக்க வேண்டும். இதை தவிர வீடுகளில் வைத்து வீட்டு வைத்தியம் செய்தல்,தனியார் மருந்து நிலையங்களுக்கு (Private Medical Centre) செல்லல் போன்றவற்றினால் வைத்தியசாலைக்கு செல்ல இருக்கின்ற நேரம் தாமதிப்பதால் இதய தசை கலங்கள் மீள் முடியாத சாவுக்கு உள்ளாகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் உரிய சிகிச்சை எவ்வளவு முன் வழங்குகப்படுகின்றதற்கு அமைய Complication தடுக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் வழங்கப்பட்ட ஆரம்ப சிகிச்சைக்கு பின் பின்வரும் ஆலோசனைகளை வழங்கப்படும். இவற்றை உரிய முறையில் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

-தொடர்ச்சியான Clinic follow up
-தொடர்ச்சி பரிசோதனைகள்( Regular Check up-Monthly Fasting Blood Sugar,Weight&Blood Pressure six monthly Fasting Lipid Profile)
-தொடர்ச்சியான மருந்து பாவனை
-மேலதிக பரிசோதனைகள்/சிகிச்சைகள்
-Life style Modifications
-Healthy Diets
-Stop Smoking
-Regular Exercise(வேகமான நடை, ஓட்டம், நீந்துதல், சைக்கிள் ஓடுதல் போன்றவை. இவை உள்ளத்தில் பதித்து உணர்வுகளுடன் செய்யும் போதே மூளையில் இதற்குறிய நரம்பு இரசாயன பதார்த்தங்கள் சுரக்கப்பட்டு உடலில் மாற்றம் ஏற்படும்.

-Relaxed Life/Nore more Stress

**பலரது எண்ணம் மாரடைப்பு ஏற்பட்டு Bypass Operation செய்துவிட்டால் அதன் பின் எல்லாம் முடிந்து விட்டது. வழமை போன்று பழைய வாழ்க்கையை தொடரலாம் என எண்ணி கிளினிக் செல்லாமலும், மாத்திரை பாவிக்காது, விரும்பியவற்றை சாப்பிட்டு, மீண்டும் புகைக்க தொடங்குகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.இதனால் மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்படலாம்/இதய தொழில்பாடு குறைந்து செல்லல்-Heart Failure/இறப்பு-Death போன்றவை ஏற்படலாம்.

எனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள்/ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் மேற்படி ஆலோசனைகளை பின்பற்றுவதால் இவற்றின் பாதிப்புகளை/இறப்பை இறைவன் நாடினால் தவிர்ந்து கொள்ளலாம்.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician
Doha-Qatar.cc




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -