-வைத்திய அத்தியகட்சகர் டாக்டர் பீ.சதீஸ் குமார்-
ஹஸ்பர் ஏ ஹலீம்-கிண்ணியா தளவைத்தியசாலையில் கடமை ஆற்றிவந்த விசேட வைத்திய நிபுணர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதால் விசேட வைத்திய நிபுணர் இன்மையின் காரணமாக அவசர நோயாளிகளை மேலதிக சிகிச்சைகளுக்காக வெளி வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்து வருகிறோம் இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் அவரது உயர் படிப்புக்காக தனது சுய விருப்பின் பேரில் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளார் என கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் டாக்டர் பீ.சதீஸ் குமார் இன்று வைத்தியசாலையில் இடம் பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது (15) தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் கடமையாற்றிய விசேட வைத்திய நிபுணரை தான் விடுவித்ததாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர் அவ்வாறு என்னுடைய அனுமதியிலோ ஏதாவது எழுத்து மூலமான ஆவணங்களிலோ நான் கையொப்பமிட்டு விடுவிக்கவில்லை.
இது தொடர்பாக உடனடியாகவே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம் .
உரிய வைத்திய நிபுணரே தனது உயர்கல்விக்கான விடுமுறையில் சுய விடுமுறையில் சென்றுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சின் மூலம் விரைவில் கிண்ணியா தளவைத்தியசாலைக்கான விசேட வைத்திய நிபுணர் நியமிக்கப்படுவார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மத்திய அரசினூடாக வைத்திய நிபுணரை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மாகாண சுகாதார அமைச்சினால் எனக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர கிண்ணியா தளவைத்தியசாலையில் உள்ள சில இடங்களில் பாதுகாப்பு சீசீ டீவி கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன கெமராக்கள் ஊடாக விசேடமாக கவனம் செலுத்தி வருகிறோம்.
ஊழியர்கள், வைத்தியர்கள் தங்களது சேவையை மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகும்.
வைத்தியசாலையின் முன்வாசல் தொடக்கம், வெளிநோயாளர் பிரிவு பகுதி, முன்னால் வைத்தியசாலை நடை பாதை , நிருவாகப் பகுதிகளில் இவ்வாறான பாதுகாப்பு கமராக்கள் ஊடாக விசேடமாக அவதானத்தை செலுத்தி வருகிறேன்.
மக்களுடைய தேவைகள் இங்கு பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் சிகிச்சைகள் இலவசமாகவும் திருப்தியாகவும் வழங்கப்படுவதே முக்கிய காரணமாகும் என வைத்திய அத்தியகட்சகர் டாக்டர் பீ.சதீஸ் குமார் மேலும் தெரிவித்தார்.