போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக இந்த நாட்டின் ஒவ்வொரு நற் பிரஜைகளும் போராட வேண்டும்


- ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட்-
லங்கையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதை தினமும் ஊடகங்கள் மூலமாக பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்கிறோம்..

படிப்பறிவு இல்லாத ஒழுக்கமற்ற சிலர்களால் பயண்படுத்தப்பட்டு வந்த போதை பாவனை இன்று சிறுவர்கள் துவக்கம் பாடசாலை, கல்லூரி மாணவர்கள் நல்லொழுக்கம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள்,படித்தவர்கள், பணக்காரர்கள் என பலரும் போதைக்கு அடிமையாகி சீரழிவதை சமூகத்தில் காணலாம்.

இவ்வாறான போதைப் பழக்க வழக்கங்களினால் கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கொள்ளை, கொலை, களவு போன்ற சமூக சட்ட விரோதமான செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது.

இது போன்ற சமூக சீரழிவான போதைப் பொருட்களை நமது நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நாட்டிட்குள் கொண்டுவரப்படுகிறது இதற்கு காரணம் தடுக்க வேண்டிய சில அதிகாரிகள் பணத்திற்காக இது போன்ற சட்ட விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே ஆகும்.

இந்த போதைப் பொருள் பாவனை சிகரட் ,பீடி போன்ற புகைத்தல் போதையில் இருந்தே ஆரம்பமாகிறது. இது போன்ற பொருட்கள் 2006 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட மது­சாரம் மற்றும் புகை­யிலைத் தடைச் சட்­டத்தின் கீழ் தடுக்­கப்­பட்­டுள்­ளன. இருந்தும் சிகரட் போன்ற போதைப் பொருட்களின் நமது நாடு அதிக வருமானத்தை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் கடந்த வருட அறிக்­கையின் பிர­காரம், இலங்­கையில் 13 முதல் 15 வய­துக்­கி­டைப்­பட்ட பாட­சாலை மாண­வர்­களில் 11 சத வீதத்­தினர் புகைத்தல் பழக்­கத்­திற்கு ஆளா­கி­யுள்­ள­தாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பாட­சாலை மாண­வர்­களில் ஆயி­ரத்தில் ஒருவர் புகை­யிலை பாவ­னைக்கு ஆளா­கி­யுள்­ளனர்.

இத­னால்தான், புகை­யி­லையை அதி­க­ளவில் உற்­பத்தி செய்­யப்­படும் யாழ். மாவட்­டத்தில் புகை­யிலை உற்­பத்­தியைக் குறைக்­கு­மாறு அல்­லது உற்­பத்­தி­யியைக் கைவிட முன்­வர வேண்­டு­மென மது­பானம் மற்றும் போதைப்­பொருள் தகவல் நிலையம் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

நமது நாடு நஞ்சு இல்லாத போதைப் பொருள் பாவனை இல்லாத தூய்மையான ஒரு நாடாக மாற்றம் பெற்று எதிர்கால சந்ததியினர் போதை இல்லாத நல்லொழுக்கம் உள்ளவர்களாக உருவாக வேண்டும் என்றால் இந்த நாட்டின் நற் பிரஜைகளான ஒவ்வொருவரும் சிகரட்,பீடி போன்ற புகைத்தல் போதை பாவனைகளுக்கு எதிராக போராட வேண்டும். இவைகளை விற்பனை செய்வதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும் இது நம் ஒவ்வொருவரதும் சமூகப் பொருப்பாகும்.

எங்கள் உறவுகள் சிகரட் போன்ற போதைக்கு அடிமையாகி இருந்தால் உரிய முறையில் அதனது தீமைகளை தெளிவு படுத்தி அவர்களையும் நமது நாட்டையும் பாதுகாக்க வேண்டும். அதே போல விற்பனை செய்பவர்கள் கிட்டத்தட்ட கொலை காரர்கள் அவர்களின் குற்றத்தை உணர்த்தி திருத்த வேண்டும் இது எமது மிகப்பெரிய சமூகப் பொருப்பாகும்.

ஆகவே இந்த நாட்டின் ஒவ்வொரு நற் பிரஜைகளும் நாட்டினதும் எதிர்கால சந்ததிகளினதும் வாழ்வில் அக்கரை கொண்ட நல்ல குடிமகனும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகப் போராடி இந்த கொடிய போதைகளை முற்றாக அழித்து ஒழிக்க முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -