பன்னெடுங் காலமாக ஈழமணித் திருநாடெங்கும் நடமாடி பல சித்துக்கள் புரிந்து காரைதீவு பதியில் ஜீவ சமாதி அடைந்த சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு நடைபெறும் வருடாந்த ரத பவனி ஊர்வலமானது 06.06.2018 இன்று வெள்ளிக் கிழமை காலை 6.00 மணிக்கு காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
இவ் ஊர்வலமானது காரைதீவு கல்முனை நகர் உள் வீதிகளுடாகச் சென்று நற்பட்டிமுனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி ஊடாக நாவிதன்வெளிஅன்னமலை வேப்பையடி மண்டூர் முருகன் ஆலயம் சென்று மீண்டும் வேப்பையடி நாவிதன்வெளி வீரமுனை சம்மாந்துறை பிரதான வீதியூடாக காரைதீவை வந்தடையும்.
சுமார் 25 உழவு இயந்திரங்களில் பக்தர்கள் அணிசேர சித்தரின் திருவுருவம் தாங்கிய ஊர்தி பின்னேவர இந்த ரதபவனி நகரவுள்ளதென ஆலய பரிபாலனசபைச்செயலாளர் த.தவகுமார் தெரிவித்தார்.
அதேவேளை ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 67வது குருபூஜை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்று கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.
முன்னதாக 19ஆம் திகதி முத்துச்சப்பரமும் 20ஆம் திகதி கோமாதாபூஜையுடனான விசேடயாகமும் திருவிளக்குப்பூஜையும் 21ஆம் திகதி கா லை பாற்குடவபனியும் தொடர்ந்து கௌரவிப்புநிகழ்வும் குருபூஜையும் இடம்பெறும். அன்றுமாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன என செயலாளர் த.தவகுமார் தெரிவித்தா ர்.