கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் புதிய கணினிக்கூடத்திறப்பு விழாவும் இலத்திரனியல் பயிற்சி முகாமைத்துவத் தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் கிழக்கு மாகாண முகாமைத்துவப் பயிற்சிப் பிரிவில் நேற்று வியாழக் கிழமை (05) நடைபெற்றது.
இப்புதிய கணினிக்கூடம், 50 பயிலுநர்கள் ஒரே தரத்தில் பயிற்சி பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு, உத்தியோகத்தர்கள் சகலரும் இப்பயிற்சிப் பிரிவுடன் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ளும் வகையில், பயிற்சி முகாமைத்துவத் தரவுத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் செல்வி எம்.எம். ஹாலிதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.