-கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை-
எம்.ஜே.எம்.சஜீத்-தூய எண்ணங்களுடன் நமது எதிர்கால சந்ததியினர் நீண்ட காலமாக நன்மை பெறக்கூடிய திட்டத்திகளை செயல்படுத்தும் போது அரசியல் இலாபம் பெறுவதற்கு முயற்சிக்க கூடாது என அட்டாளைச்சேனை மீனவர்கள் தொடர்பான விஷேட கூட்டம் கல்முனை மீன் பிடி தினைக்களத்தின் பரிசோதகர் திரு. பாபு தலமையில் அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றி கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்....
எமக்கு இறைவனால் இயற்கையாக வழங்கப்பட்டுள்ள இயற்கை வளங்களை எமது எதிர்கால சந்ததியினர் நீண்ட காலம் நன்மையடையக் கூடிய வகையில் பாதுகாத்து நாம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் ஒரு ஊரின் ஆரம்பம் இருந்து முடிவு வரை ஊரின் மத்தியில் செல்லக்கூடிய வகையில் கோணவத்தை ஆறு இயற்கையாக அமைந்துள்ளது. மத்திய நீர்பாசன திணைகளத்திற்கு சொந்தமான இந்த ஆற்றினை பாதுகாப்பதற்கு மத்திய நீர்பாசன திணைக்களம் நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆற்றங்கரை இரு கரையோரங்களிலும் வாழ்ந்த மக்கள் படிப்படியாக எல்லைகளை நகர்த்தி வந்தனர்.
இந்த நடவடிக்கைகளை தடை செய்வதற்கு அரசியல்வாதிகள் யாரும் முன்வரவில்லை ஏனெனில் தேர்தல் காலங்களில் ஆற்றங்கரையோரத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் தனக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்ற அச்சத்தினால் மௌனமாக இருந்தனர். கிழக்கு மகாகாண நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மத்திய நீர்ப்பாசன, மாகாண நீர்ப்பாசன திணைக்களங்களின் ஒத்துழைப்புடனும், துறைசார்ந்த நிபுனர்களின் ஆலோசனைகளையும் பெற்று துர்நாற்றம் ஏற்பட்டு அழுக்கடைந்த நிலையில் அமைந்துள்ள கோணவத்தை ஆற்றினை எல்லைப்படுத்தி அகலமாக்கி அழகுபடுத்தும் திட்டத்தினை தியாக மனப்பாங்குடன் செயல்படுத்தினோம்.
அட்டாளைச்சேனை கோணவத்தை ஆறு அகலமாக்கப்பட்டது, அழகுபடுத்தப்பட்டது, எல்லையிடப்பட்டது ஆயிரக்கணக்கான நெல்வயல் காணிகளின் வடிச்சல் ஒடக்கூடிய வகையில் புணரமைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வேலைதிட்டத்தினை சுய நல அரசியலுக்காக அன்று முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை அரசியல்வாதிகள் தடை செய்தனர். அந்த வேலை திட்டம் தடை செய்த இடத்தில் அப்படியே நான்கு வருட காலமாக உள்ளது. இன்று அட்டாளைச்சேனையை சேர்ந்த சகோதரர் ஏ.எல்.எம் .நஸிர் எம்.பீ பதவியில் உள்ளார். அவர் எம்.பீயாக பதவி வகிக்கும் காலத்திலும் அவருக்கு பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களாக வருபவர்களும் நமது பிரதேச மக்கள் எததிர்காலத்தில் பயன்பெறக்கூடிய திட்டங்களை செயல்படுத்த கூடிய வகையில் திட்டமிட்டு ஆரம்பித்து வழி காட்டியுள்ளோம். அந்த திட்டங்களை செயல்படுத்த நாம் வழியமைத்துள்ளோம்.
நமது மக்கள் நன்மையடையக் கூடிய திட்டங்கள் தொடர்பாக கனவுகள் கானும் போது எப்போதும் உயர்ந்த எண்ணங்களுடன் கனவு காண வேண்டும். அந்தக் கனவுகள் நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை நமது எதிர்கால சமூகம் நிறைவேற்றும்; என்பதனை மனதில் கொண்டு நாம் எப்போதும் செயல்பட வேண்டும். அட்டாளைச்சேனை கோணவத்தை அபிவிருத்தி சபையிடம் கோணவத்தை சம்புகளப்பு ஊடாக பெரிய களப்பு பகுதிக்கு படகுகள் ஊடாக குடும்பங்களாக சென்று வரக்கூடிய திட்டங்கள் உள்ளதுடன் கோணவத்தை ஆற்றில் சீ பிளேன் சேவையினை ஆரம்பிக்கும் திட்டமும் உள்ளது. அட்டாளைச்சேனையில் சீ பிளேன் சேவை ஆரம்பிப்பதால் நமது தென்கிழக்கு மக்களுக்கு பாரிய நன்மை கிடைக்கும்.
தென் கிழக்கில் வாழும் நமது மக்கள் குடும்பங்களுடன் சென்று இயற்கையான பிரதேசத்தை பார்வையிட்டு தங்களின் ஒய்வு நேரங்களை களிக்க முடியாத துர்பாக்கிய சூழ்நிலையில் உள்ளனர். இத்திட்டத்தின் ஆரம்ப இடம்தான் அட்டாளைச்சேனை கோணவத்தை ஆறு இத்திட்டத்தின் முடிவு பெறும் இடம் பெரிய களப்பாகும். மிகவும் அசிங்கமாக காட்சியளித்த அட்டாளைச்சேனை கோணவத்தை ஆறு அழகு படுத்தப்பட்டு நோன்பு காலங்களில் நமது மார்க்க நிகழ்வுகள் நடைபெறும் இடமாகவும் அமைந்துள்ளது.
இந்த நிலமை குறித்து நாம் இறைவனுக்கு நன்றி சொல்லக்கடமைபட்டுள்ளோம். இத்திட்டத்தினை தனிநபர் ஒருவர் நீர்பாசன திணைக்களத்தின் அனுமதியினையும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரின் அனுமதியினையும் பெற்று படகு சேவையினை ஆரம்பம் செய்திருந்தார். நமது தென் கிழக்கு பிரதேச மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து அட்டாளைச்சேனையில் இயற்கையாக அமைந்துள்ள பிரதேசங்களில் தங்களின் ஒய்வு நேரங்களை களித்தனர். இப்படகு சேவையினை கண்ட சில அரசியல் சுயநல எண்ணம் கொண்டவர்கள் இப்படகு சேவை நடைபெறுவதால் கோணவத்தை ஆற்றில் லாம்பெண்ணை கலந்துள்ளது என சிலரை முறைப்பாடு செய்யச் சொல்லி உடனடியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் இப்படகு சேவையினை தடை செய்துள்ளார்.
மக்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அரசியல் இலாபம் தேடும் முயற்சிகளாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு விஷேட லீவு நாட்களில் படகு சேவையினை நடாத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். எங்களிடம் அரசியல் அதிகாரம் இருந்த காலத்தில் மீனவர் சமூகத்தின் நலன் கருதி கட்சி பேதங்கள் இன்றி பணிபுரிந்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக மீனவர்களுக்கான தனியான வீட்டு திட்டம் ஒன்றை உருவாக்கினோம். மீனவர்கள் தேர்தல்களில் எங்களுக்கு வாக்களித்தார்களோ இல்லையோ எங்களுக்கு தெரியாது ஆனால் கட்சி பேதமின்றி கிழக்கு மாகாணம் முழுவதும் எங்களால் முடிந்தளவு மக்களுக்கான பணிகளைப் புரிய இறைவன் எங்களை பாவித்துள்ளான் என தெரிவித்தார்.