பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் கருத்தரங்கு (27) அண்மையில் தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் மிக விமர்சயாக நடை பெற்றது. இவ் கருத்தரங்கு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது .
ஆசிரியர்களுக்கான கற்பித்தல் நுணுக்க முறை கருத்தரங்கும் , மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய கருத்தரங்கும் இடம்பெற்றது.
குறிப்பாக பொது மக்களின் ஆரோக்கியமான வாழ்வை வலுவூட்டும் நோக்கில்
இந்த ஏற்பாடு பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் அவர்களின் தலைமையின் கீழ் நாடாத்தப்பட்டது.
இவ் நிகழ்வில் விஷேட அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.ஜே.பாயிஸ் அவர்களும், முன்னால் அதிபர் பாஸில், இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் என். எம். அமீன்
மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள கலாநிதி,உளவியல் சிகிச்சையாளர் பரிமலம்,ஜெர்மன் நாட்டின் உளவியல் சிகிச்சையாளர் உல்ரிகா மற்றும் கல்வியியல் ஆலோசகர் பைசீன் சுபைர்,அகில இலங்கை மக்கள் காங்ரசின் செயலாளர் அல்ஹாஜ் சுபைதீன்,மற்றும்
மனித உரிமை அமைப்பின் பணிப்பாளர் சரீக் முஹம்மட் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதில் பங்கு பற்றிய விஷேட அதிதிகளுக்கும், மாணவர்களுக்கும் நினைவுச்சின்னமும் சான்றிதழ்களும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..