மேல் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை பயன்படுத்தி பயமுறுத்திய இளைஞர்களுக்கு பிணை


அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் புகைப்படத்தை பயன்படுத்தி பயமுறுத்திய மூன்று இளைஞர்களையும் தலா இரண்டு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் திருகோணமலை,கந்தசாமி கோயில் வீதியைச்சேர்ந்த மோகன் சசிகரன் (19வயது) உட்துறைமுக வீதியைச்சேர்ந்த தம்பிராஷ பிரனிஜன் (19வயது) மற்றும் பாரதி வீதியைச்சேர்ந்த ரவீந்திரன் மதுரன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நகர்த்தல் பத்திரத்தின் மூலம் செய்யப்பட்ட விண்ணப்பத்தையடுத்து இவ்வழக்கு இன்று (31) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை குருஞ்செய்தி மூலம் அனுப்பி அவருடைய பெயரை பயன்படுத்தி பயமுறுத்தி தலைக்கவசத்தினால் அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கடந்த 26ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மூவருக்கும் எதிராக தலைமையக பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல்  செய்தனர்.
இக்குற்றத்திற்கமைவாக கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.எம்.அன்பார் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நகர்த்தல் பத்திரத்தின் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இருவர் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 06ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அம்மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளதாகவும் நீதவானிடம் தெரிவித்தனர்.

இதனை கருத்திற்கொண்ட திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மூன்று பேரையும் தலா இரண்டு இலச்சம் ரூபாய் வீதம் சரீர பிணையில் செல்லுமாறும் மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்ததுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
அத்துடன் எதிர்வரும் 09ம் மாதம் 03ம் திகதி வழக்கிற்கு சமூகமளிக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -