ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு- களுவன்கேணி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயத்திற்கான புதிய கட்டடம் சம்பிரதாயபூர்வமாகத் திறக்கப்பட்டது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா இதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சோமஸ்கன் சபையின் மானில முதல்வர் அருட்தந்தை யோசப் தம்பி, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜி.மகிமைதாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுமார் எழுபது வருடகாலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கிவந்த இவ்வாலயம் தற்போது புதிய கட்டடம் ஒன்றைப்பெற்றுள்ளது.
இத்திறப்புவிழா நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்கர்கள் பிரசன்னமாயிருந்தனர்.