கல்முனை மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் அங்குரார்பண விழா


நிப்றாஸ் மன்சூர்-
ல்முனை மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் அங்குரார்பண விழா எதிர்வரும் புதன்கிழமை (1) கல்முனை முஹ்யுத்தீன் மஸ்ஜித்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கண்ணியத்துக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது எஸ்.எஸ் பத்ஹுல்லாஹ் தங்கள் அவர்களும், விஷேட அதிதியாக கண்ணியத்துக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது எஸ்.எம் மஷூர் தங்கள் அவர்களும், கெளரவ அதிதியாக கண்ணியத்துக்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது ஹிபதுல்லாஹ் தங்கள் அவர்களும், மேலும் சிறப்பு அதிதிகளாக உலமாஉகளும், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும், கல்விமான்களும், வர்த்தகர்களும், சமூக சேவை அமைப்புகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். கல்லூரி நிர்வாகத்தினர் பொதுமக்களையும் இவ் அங்குரார்ப்பண விழாவிற்கு அலைக்கும் முகமாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.

இஸ்லாமிய அகீதா , அஹ்லாக் ஆகியவற்றை மகளிர்களுக்கு போதிக்கும் மௌலவியாக்களை உருவாக்கக்கூடிய மகளிர் அரபுக் கல்லூரிகள் கல்முனை மாநகரில் குறைவாக இருப்பதனால் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் மகளிருக்கான மைமூனா மகளிர் அரபுக் கலாபீடம் உதயமாக இருக்கின்றது. இஸ்லாமிய சத்திய கொள்கை விளக்கங்களை மாதர் சமூகத்திற்கு விளக்கி ஒழுக்கப் பாதையில் நடத்திடும் வகையில் ஆத்மீக கல்வியையும், G.C.E O/L, G.C.E A/L ஆகிய லௌகீக கல்விகளை வழங்குவதுடன், பல்வேறு துறைகளான கணனி, தையல் பயிற்சிகளும் வழங்க திட்டமிட்டுள்ளனர் கல்லூரி நிர்வாகத்தினர். மேலதிக விபரங்களுக்கு 0772240920, 0753967127, 0778562168 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறும் வேண்டப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -