நல்லாட்சி அரசாங்கம் பொருளாதராத்தை பாதாளத்தை நோக்கியே கொண்டு செல்கிறது ;நாமல் MP


நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வந்த நல்லாட்சி அரசாங்கம் பொருளாதராத்தை பாதாளத்தை நோக்கியே கொண்டு சென்றுகொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும்குறிப்பிடுகையில்,
முன்னர் இலங்கையில் உள்ள சகல ஹோட்டல்களும் ராஜபக்‌ஷக்களின் என்றார்கள்ஹம்பாந்தோட்டை ஷெங்கிரில்லா ஹோட்டல் நாமல் ராஜபக்‌ஷவினுடயது எனகூறிவிட்டு ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக அதனை திறந்துவைத்தார்.

கொழும்பு ஷெங்கிரில்லா ஹோட்டல் ராஜபக்‌ஷக்களின் என்று கூறிவிட்டு ஜனாதிபதிபிரதமர் ஆகியோர் சென்று அந்த ஹோட்டலை ரிபன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வனங்களை காடுகளை சுத்தப்படுத்தி ஹோட்டல்திறக்கிறார்கள்.அதனை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்னதிறந்துவைக்கிறார்.உரிமையாளர் தனது நண்பர் என்கிறார்.அன்று வெளிநாட்டவர்கள்இலங்கையில் ஹோட்டல் திறந்தாலும் அது ராஜபக்‌ஷக்களின் ஹோட்டல்கள் என்றார்கள்.இன்று காடுகளை வனப்பிரதேசங்களை அழித்து ஹோட்டல் நிர்மாணிக்கிறார்கள்.

அன்று பாராளுமன்றத்தில் அலோசியஸ் முதலாளி நாமல் ராஜபக்‌ஷவின் நண்பர் சுஜீவகூறினார். எனக்கு 800 தொலைபேசி அழைப்புகள் எடுத்துள்ளதாக கூறினார்.ஆனால் 3மில்லியன் காசோலையை அவரே பெற்றுள்ளார்.நாமல் ராஜபக்‌ஷவை சால்வையில்சுருக்கிட்டு தூக்கில் தொங்குமாறு கூறிய சுஜீவ சேனசிங்க இன்று சால்வையில் சுருக்கிட்டுஅவரே தொங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது .இலங்கை ரூபாவின்பெருமதி வீழ்ச்சியடைந்து வருகிறது . இன்று டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபா 161ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தியவசியப்பொருட்களின் விலைகள் பாரிய அளவில்அதிகரித்துள்ளன.
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.அரசாங்கம் இதனைபெருட்படுத்தாமல் வரிச்சுமைகளை அதிகரித்து வருகிறது.அமைச்சர்களுக்கானசுகபோகங்களை அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -