கடந்த 05.06.2018 அன்று இறையடி சேர்ந்த முன்னாள் சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அப்திபர் மர்ஹும் ஏஎல்எம்.றஹீம் ஆசிரியர் அவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தில் பெரும் மதிப்பு மிக்க ஒருவர் என்பதற்கு அப்பால் அரசியல் எனும் கொள்கையில் குளறியடிக்காமல் தனிவழியாய் பல தலைமைகளுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் என அனாருடைய பெயரில் நேற்று 11.06.2018 சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இடம் பெற்ற இஃப்தார் நிகழ்வில் ஒன்று கூடிய மக்களால் தெரிவிக்கப்பட்டது.
ஆதம்லெப்பை றாஹில் தம்பதியின் அருமை மகனே அப்துல் றஹீம்
உம் மறுமையின் வழி பயணம் உள்ளங்களை விழித்தெடுக்கின்றது.
கல்வியில் உயர்ந்த படி ஏறி கணித துறையில் மேலோங்கி
அதனை போதிக்கும் ஆசானாய் அநேக ஆண்டுகள் சேவை செய்து
ஆயிரகணக்கில் மாணவரி அதி உச்சத்தில் கொண்டு சேர்த்தாய்
உன்னுடன் பிறந்த தம்பி தங்கை உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் ஒவ்வொருவருமே உன் சொல்லை உயிராய் கேட்டு மதித்துள்ளனர்.
தாமரை குளத்து தலைமலராய் தரித்து அழகு பரப்பி நின்றாய்
பெற்ற கல்வியை மற்றவருக்கு பெருமனதோடு போதித்தாய்.
தான் பெற்ற இன்பம் வையம் பெற தயக்கம் சிறிதும் காட்டாமல்
ஊரார் பிள்ளைக்கு ஊடியதால் உன் பிள்ளைகளும் உயர்ந்தார்கள்.
தக்கார் தகவிலர் என்பவற்றை தனது எச்சங்கள் காட்டுவதாய்
உச்சக்கருத்து போதகர்கள் ஓதியுள்லார்கள் உலகறிய
அத்தனை உண்மையும் உன்னளவில் அணுப்பிசகாது நடந்தவற்றை
கண்கூடாக காண்கின்றோம், கட்டாயம் இதன் பலன் கிடைக்கும்.
சம்மந்தியூர் அக்கரைப்பற்றில் சம்மந்தம் நீ வைப்பதற்கு
கொண்டான் கொடுத்தான் அடிப்படையில் டாக்டர் ஆரிஃபா மனைவியுடன்
நல்ல குடித்தனம் செய்து வந்தாய்.
ஆண் மூன்று பெண் ஒன்றுமாய் அதன் பயனாக பெற்றுள்ளாய்.
தாய் வழி மூத்த மகனை நீ தரமான டாக்டர் ஆக்குகின்றாய்.
இரண்டாம் மகனை உன் வழியில் என்ஜினியராய் ஆக்குகின்றாய்.
மூன்றாம் மகனை உன்னைபோல் பீ.எஸ்.சியாய் ஆக்குகின்றாய்.
நாலாவது தான் நீ பெற்ற நற்குணசாலி நுஹா றாஹில்
புட்சிற்றியில் உன்னை அழைத்து போக வந்து நிற்பவர்கள்
அவசரப்படுத்திய காரணத்தினால் அங்கு சென்றாய் அவசரமாய்
சென்ற தந்தையை காணாமல் திணறிப்போன நுஹா றாஹில்
பத்திப் பதறிச் செய்தவைகள் பாரட்டுக்கு உரியனவாம்.
நாலும் நலமாய் நலமாக் நற்கனிகளாக இருப்பது உன்
தொழிலில் நீ செய்த சேவைக்கு தூயோன் தந்த கூலி இது.
தந்தையின் துணிவு உன்னிடத்தில் சற்றும் குறைவு இல்லா….
எல்லா இடத்திலும் தைரியமாய் எதையும் செய்வாய் துணிவோடு.
அன்று தொடக்கம் இன்று வரை அரசியலில் நீ கொண்ட கொள்கை
என்றும் குளறியடிக்காமல் இயங்கி வந்தது தனி வழியாய்
உனது இழப்பு அநேகருக்குபதிரம் சொரிய வைக்கிறது
அநேகர் பிடரியிலும் மெளத்து அமர்ந்துள்ளதாக ஆக்கியது.
படுபாதங்கள் செய்பவரும் பயத்தால் ஒதுங்கி நிற்கின்றனர்
பாவம் பொறுத்து காப்பதுவும் ஆன நோன்பு காலத்திலே
அல்லாஹ் உன்னை அழைத்துள்ளான் வல்லோன் உனது பாவங்களை
விழித்து எறிந்து மன்னித்து………..
உயர்ந்த பிர்தெளஸ் தருவதற்கு உள்ளம் உருகி வேண்டுகின்றோம்.
கலாபூஷணம் கலைமணி
ஏ.ஸி. இஸ்மாலெப்பை
சம்மாந்துறை.