சவூதி அரேபியா நஜ்ரான் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவர்களுக்கும் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு 13.06.2018 புதன் கிழமை காத்தான்குடி கடாபி ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல் , உரிமை, பொருளாதாரம், ஊடகம் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் இஸ்லாமிய பிரச்சார பணிகளின் முன்னேற்றம் தொடர்பிலும் கருத்தாடப்பட்டது..
இச் சிநேகபூர்வ சந்திப்பு காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவர் ஊடகவியலாளர் டீன் பைரூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்..