திருகோணமலையில்: காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகரிடம் மஹஜர் கையளிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
காணாமல்போனோர் அலுவலகத்தின் சந்திப்பு, திருகோணமலை மாவட்டத்தில், புதன்கிழமை (13) இன்று உவர் மலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது, இதனைக் கருத்திற் கொண்டு திருகோணமலைஅமரா குடும்பம் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியமும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையமும் இணைந்து இளைஞர்கள் சார்பாக மஹஜர் ஒன்றினை கையளித்திருந்தது.அம் மஹஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

வடகிழக்குப் பகுதிகளில் காணாமல்போனோருக்கான அலுவலகங்கள் திறக்கப்படவேண்டும்,காணாமல் போனோர்களின் தகவல்களை உரிய குடும்பங்களுக்கு அரசு பெற்றுத் தரவேண்டும்,தடுப்புக் காவலில் உள்ளோர்களை விசாரனை செய்து துரிதமாக விடுதலை செய்யவேண்டும் என்பதுடன் வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியான ஆலோசனைகளையும் வழக்கு விபரங்களையும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்,காணாமல் போனோர் அலுவலகத்தில் கடமைகளுக்காக விசாரனை செய்யும் அலுவலர் பெண்கள் நியமிக்கப்படவேண்டும் ஏனெனில் ஆண்களின் அதிகாரி நியமனம் காரணமாக பாலியல் வன்முறைகள் நடக்க நேரிடும்,நஷ்ட ஈட்டு முறைகள் தெளிவாக வழங்கப்படவேண்டும்,காணாமல் போனோர்களுக்கான குடும்பங்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் அதனூடாக அரச உதவித்திட்டங்கள் பாடசாலை பிள்ளைகளுக்கான கொடுப்பனவுகள் போன்ற சலுகைகள் சான்றிதழ்கள் உள்ளோருக்கு வழங்கப்படவேண்டும் எனவும் அம் மஹஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும்.யுத்த காலங்களில் வட-கிழக்கு பகுதிகளில், காணமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் காணாமல்போனோர் அலுவலகமானது, தனது ஆரம்ப சந்திப்புகளை கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தது.

இச்சந்திப்புகள் மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில், தனது அடுத்த சந்திப்பே இன்று, புதன்கிழமை (13) திருகோணமலையில் நடைபெற்றது

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், சிவில் சேவை அமைப்புக்கள், காணாமல் போனோர் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களை சந்தித்து காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் ஏழு பேரும் சந்தித்து அலுவலகத்தின் திட்டம் மற்றும் மூலோபாயங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -