அண்மையில் அரச முகாமைத்துவ உதவியாளர்களாக திருகோணமலை மாவட்டத்திற்கு 51 இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு
கடந்த 10 தினங்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டதுடன் பயிற்சி நெறியை
நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் சேவை நிலையத்திற்கான பிரதேச செயலக அடிப்படையிலான நியமனக்கடிதமும் மாவட்ட
அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவினால் (31) மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்டது.
புதிதாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நீங்கள் மக்களுக்கான சேவையை மனிதாபிமான அடிப்படையில் நிறைவு செய்து
கொடுக்க வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள மக்களில் அனேகமானவர் குறை வருமானமுடைய குடும்பங்ககளாகும். அத்துடன் மூவின
மக்களும் இங்கு வாழ்கின்றார்கள். இன மத மொழி வேறுபாடின்றி தங்களால் மேற்கொள்ளப்படும் கருமங்களை
வினைத்திறனுடனும் சமத்துவ ரீதியாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பொது மக்கள் எடுத்துக்கூறும் விடயங்களை நன்றாக
செவிமடுத்து அதற்கு முடியுமான விதத்தில் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது
தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜாஇ உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன்இ மாவட்ட
செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்இ மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன்
உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.