வெள்ளவத்தை ருத்திரா மாவத்தையில் உள்ள சைவமங்கயா் கல்லுாாியின் மேம்பாலமொன்றினை அமைச்சா் மனோ கனேசனினால் நேற்று(22) திறந்து வைத்தாா்.
இக் கல்லுாாியின் ஆரம்பப் பிரிவும் - சிரேஸ்ட பிரிவு கட்டங்களுக்கு பாதையின் குறுக்காக்ச செல்வதற்கு மாணவிகள், ஆசிரியா்கள் பாரிய பிர்சினைகளை எதிா்நோக்கி வந்தனா்.
இவ்விடயத்தினை சைவமங்கையா் கழகத்தின் முகாமையாளா் திருமதி சிவநந்தினி துறைசாமி அமைச்சா் மனோ கனேசனிடம் ருத்திரா மாவத்தையின் மேம்பாலம் ஒன்றினை நிர்மாணித்துத் தரும்படி ஒரு வருடங்களுக்கு முன் வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதமொன்றை அனுப்பியிருந்தாா். இதனை உடன் கவணத்திற்கெடுத்து அமைச்சா் மனோ கனேசன் உரிய வரைபடங்களையும் அரச நிறுவனங்கள் ஊடாக அனுமதித்து 70 இலட்சம் ருபா நிதியையும் ஒதுக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இம் மேம்பாலம் திறப்பு வைபவத்தில் மேல்மாகாண சபை உறுப்பிணா்கள் ரீ.குருசாமி, எம். குகவரன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கராவும் கலந்து கொண்டனா்.