விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து 10 உறுப்பினர்கள் இலங்கைக்கு தந்துள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்எம் மொஹமட் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் தேர்தல் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாவர்.
இந்தியாவிலிருந்து 4 பேரும் , தென்கொரியாவிலிருந்து 2 பேரும் , மாலைதீவிலிருந்து 2 பேரும் இந்தோனேசியாவிலிருந்து 2 பேரும் வருகைதந்துள்ளனர். இவர்கள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு விஜயம் செய்து வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வர்.
இதன் பின்னர் தமது நாட்டிற்கு இது தொடர்பிலான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையார் எம்எம் மொஹமட் எமது செய்திப்பிரிவிற்கு மேலும் தெரிவித்தார்.