திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய காதலனை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று(8) உத்தரவிட்டார்.
தெவனகல,மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இரண்டு வருடகாலமாக குறித்த சிறுமியை காதலித்து பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர்களினால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சமூகமளிக்குமாறு வேண்டப்பட்டதற்கிணங்க சந்தேக நபர் நேற்று(7) மாலை சரணடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை இன்று(8) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.