கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான மட்டக்களப்பு மாவட்ட அலிஷாஹீர் மெளலானா கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து ஏறாவூர் அரசியல் மற்றும் நகர சபை ஆட்சியமைத்தல் தொடர்பில் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது ஸ்ரீ.மு.காங்கிரஸ் தலைவரிடம் மெளலானா இவ்வாறு குறிப்பிட்டார்.
நான் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றியீட்டியுள்ளேன். கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸில் போட்டியிட்ட அதாவது கடந்த 1994 யில் நடாந்த பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் ஆகியோரை படுதோல்வி அடையவைத்து நான் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளேன். அந்த அளவுக்கு ஏறாவூர் மக்கள் என்னுடன் ஒட்டி உறவாடி ஒரு குடும்பமாக நாங்கள் இருக்கிறோம்.
இந்த நிலை இவ்வாறு இருக்க நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஊரை இரண்டாக்கி மக்களைப் பணத்தைக் காட்டி மயக்கி தன்வசப்படுத்தலாம் என்று நினைத்து பகற்கனவுடவர்களை ஏறாவூர் மக்கள் சுக்கு நூறாய் உடைத்து குப்பையில் போட்டிருப்பது பல கோடிகளைச் செலவு செய்தவர்கள் புரிந்திருப்பார்கள்.
ஆனால் நான் தோற்றிருந்தால் எனக்கு அது தாருங்கள் இதுதாருங்கள் என்று கேவலமான முறையில் பிச்சை கேட்டு வந்திருக்க மாட்டேன். நான் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறேன். மக்கள் மெளலானாவுடன் இருக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களை மக்கள் இனம்கண்டு கொண்டனர். இனியும் இவர்களின் போலி சித்து விளையாட்டுக்கள் ஏறாவூர் மக்களிடம் மாத்திரம் மன்றி மட்டக்களப்பு மாவட்டம் இல்லாது கிழக்கு மாகாண மக்களிடமே இவர்கள் எடுபடமாட்டார்கள் என்பதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
அத்துடன் இன்று மிகமோசமாகத் தோல்வியடைந்தும் நான் குறிப்பிடும் நபரையே தவிசாளராக்க வேண்டும் என்றும் கேவலமான கருத்துடன் தலைவரின் காலைப்பிடிக்கும் இந்த கேவலத்துடன் யாருக்கும் கொடுக்கா விட்டாலும் பறவாயில்லை எனக்குத்தான் தேசியப்பட்டியல் தரவேண்டும் என்று கேட்கும் சுயநலவாத அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த அரசியலில் மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் வந்து தலைமையை நேரம் காலம் பாராது நச்சரித்துக்கொண்டிருத்தல் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
ஆனால் ஏறாவூர் மக்கள் எனக்கு வழங்கிய ஆணைக்கமையவும் தலைமை வழங்கிய வாக்குறுதிக்கமையவும் ஏறாவூர் நகரசபையின் ஆட்சியை தராசிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுடன் கட்சிக்காக வழங்கப்படவிருக்கும் பிரதிஅமைச்சுக்களில் தலைமை விரும்பினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வழங்கலாம் அதற்காக நான் சண்டையிடமாட்டேன் கஸ்டப்படுத்தவும் மாட்டேன் என்றும் பாராளுமன்ர உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.